இளவரசி டயானா இறந்ததும் லண்டனுக்கு வர மறுத்த ராணி: வெளியான நெஞ்சை உருக்கும் காரணம்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானிய இளவரசி டயானா விபத்தில் இறந்ததும் ராணி உடனடியாக லண்டன் திரும்பாததற்கான காரணம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரித்தானிய இளவரசி டயானா 1997ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 31ம் திகதியன்று பாரிசில் நடந்த விபத்து ஒன்றில் பரிதாபமாக பலியாகினர்.

இந்த சம்பவமானது ஒட்டுமொத்த அரச ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தையும், கண்ணீரையும் வரவழைத்தது. அதேசமயம் அரச குடும்பத்தினர் மீதி அதிக கோபத்தை ஏற்படுத்தியது.

விபத்து நடந்த சமயத்தில் தன்னுடைய மகன் சார்லஸ் மற்றும் பேரன்கள் வில்லியம் மற்றும் ஹரியுடன் சுற்றுலாவில் இருந்த ராணி, உடனடியாக லண்டன் திரும்பவில்லை. பக்கிங்காம் அரண்மனையில் தொழிற்சங்க கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படாததால் அரச ரசிகர்கள் ராணியின் மீது கோபத்தில் இருந்தனர்.

அப்பொழுது இளவரசியின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட இளம் இளவரசர்களுடன், பொதுமக்கள் புடைசூழ்ந்து மலர் அஞ்சலி செலுத்தினர். அதன் பிறகு சில நாட்கள் கழித்து தான் ராணி லண்டன் திரும்பினார். கருப்பு ஆடையில் நெஞ்சில் சிகப்பு நிறத்திலான மலரை குத்திக்கொண்டு, டயானாவிற்கு அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிலையில் அன்றைய தினம் ராணி லண்டன் வர மறுப்பு தெரிவித்ததற்கான காரணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இளவரசி டயானா குறித்த எழுத்தாளர் டினா பிரவுன் இதுகுறித்து கூறுகையில், இளவரசி இறந்ததும், தன்னுடைய பேரன்களின் நலனுக்காகவே ராணி உடனடியாக லண்டன் திரும்பவில்லை.

ஆனால் அவர் திட்டமிட்டதற்கு முன்தினமே லண்டனிற்கு வந்துவிட்டார். பொதுமக்கள் மற்றும் மீடியாக்களின் விமர்சனங்களை பற்றி அவர் பெரிதும் கவலைகொள்ளவில்லை.

இளம்வயதில் தாயை இழந்த இளவரசர்களை எண்ணி ராணி பெரும் கவலை கொண்டார். இளவரசி டயானா இறந்ததை நினைத்து மனமுடைந்து காணப்பட்ட ராணி, இளவரசர்களுக்கு எந்த மனஅழுத்தமும் ஏற்பட கூடாது என்பதில் மிகுந்த கவனத்துடன் இருந்தார். ராணியாக இருந்த இத்துணை வருடங்களில் தன்னுடைய குடும்பத்தை நினைத்து ராணி பெரிதும் கவலை கொண்டது அது தான் முதல்முறை என தெரிவித்துள்ளார்.

முன்னதாக இளவரசி டயானா இறந்த அடுத்த சில நாட்களில் அந்த கவலை தன்னுடைய பேரன்களுக்கு தெரியக்கூடாது என்பதற்காக இளவரசர் பிலிப், வில்லியம் ஹரியை அழைத்துக்கொண்டு குதிரை சவாரி உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்குகளில் நேரத்தை செலவிட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்