லண்டன் வீதியில் முறுக்கு மீசை..தாடியுடன் வலம் வரும் இந்த கோடீஸ்வரர் யார்? அதிர்ச்சியை ஏற்படுத்திய பின்னணி தகவல்

Report Print Santhan in பிரித்தானியா

இந்தியாவைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரி ஒருவர் மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அவர் லண்டனில் எந்த வித பயமுமின்றி உலா வரும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

மும்பையைச் சேர்ந்தவர் நிரவ் மோடி. வைர வியாபாரியான இவர் பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13,000 கோடி கடன் பெற்று அதை திருப்பி செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு உள்ளது.

இதனால் அவர் மீதும் அவரின் குடும்பத்தினர் மீதும் சிபிஐ அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறது.

இந்த தகவல் வெளியில் வருவதற்கு முன்னரே அவருடைய குடும்பத்தினர் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றுவிட்டதாக செய்தி வெளியானது.

இதையடுத்து அவர்களைக் கண்டறிந்து, மீண்டும் இந்தியாவுக்குக் கொண்டுவரும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுவந்தார்கள்.

சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரன்ட்டை பிறப்பித்திருந்தது.

அதுமட்டுமின்றி கடந்த ஆண்டு, இன்டர்போல் அமைப்பும் நிரவ் மோடிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் ஒன்றை வெளியிட்டது.

இந்நிலையில் நிர்வ மோடி போலி பாஸ்போர்ட் காரணமாக பல நாடுகளுக்கு சுற்றி வந்ததால், அவர் எங்கிருக்கிறார் என்பதில் குழப்பம் நிலவி வந்த நிலையில், அவர் இப்போது பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில் இருக்கிறார் என்பதை பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

இதை அந்நாட்டு அதிகாரிகளும் உறுதி செய்துள்ளனர்.

இவர் அங்கு மிகவும் அதிக விலை கொண்ட குடியிருப்பில் தங்கி வருவதாகவும், அவரிடம் பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பிய போது, நோ கமெண்ட்ஸ் என்று பதிலளித்துள்ளார்.

மேலும் அவர் இந்தியாவில் இருப்பது போன்று லண்டனில் இல்லை, சற்று வித்தியாசமாக

மீசை தாடியுடன் இருக்கிறார்.

லண்டனில் அவர் வைர வியாபாரம் செய்துவருவதாகவும் இந்தியாவில் தேடப்படும் நபர், இன்டர்போல் பொலிசாரால் ரெட் கார்னர் வழங்கப்பட்ட நபர், பிரித்தானியாவில் ஹாயாக வலம்வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், அவர் தனது நண்பர் பெயரில் லண்டனில் வைர வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறாராம்.

தற்போது அவர் இருக்கும் குடியிருப்பில் ஒரு ப்ளாட்டின் விலை, இந்திய மதிப்பில் 72 கோடி ரூபாய் எனவும் கூறப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்