பாலியல் தொழிலாளியாக இருந்த போது நான் அனுபவித்த துயரம்! பிரித்தானியா இளம் பெண் சொன்ன கண்ணீர் சம்பவம்

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவைச் சேர்ந்த பாலியல் தொழிலாளி பெண் ஒருவர் தான் எப்படி பாலியல் தொழிலில் வந்தேன், அதில் இருந்து மீண்டது எப்படி என்பது குறித்து தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவைச் சேர்ந்த பெயர் தெரிவிக்காத பெண் ஒருவர் பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில், அவர் நான் போதை பழக்கத்திற்கு அடிமையாகியிருந்தேன். இதனால் பணம் தேவைப்பட்டது.

அதற்காக தன்னுடைய 24 வயதில் பாலியல் தொழிலுக்கு வந்தேன். அப்போது நான் அங்கிருக்கும் வீதி ஒன்றில் காலை 4 அல்லது 5 மணிக்கு போய் நிற்பேன்.

அப்போது தெரியாத நபர்கள் சிலர் வருவர். இருட்டிலே பல மணி நேரம் போகும், ஒரு சிலர் அப்படி நான் நிற்கும் போது, கத்தி மற்றும் துப்பாக்கியை காண்பித்து எல்லாம் மிரட்டி பாலியல்பலாத்காரம் செய்துள்ளனர்.

அதுமட்டுமின்றி போதை பழக்கத்தால் திருட்டு போன்ற குற்றச்சம்பவங்களிலும் ஈடுபட்டுள்ளேன். இதற்காக சிறையில் நான் பல முறை அடைக்கப்பட்டுள்ளேன்.

அதன் பின் அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்ட நான் கடந்த 2015-ஆம் ஆண்டு லண்டன் பக்கம் வந்தேன். அங்கு சிறிய வேலைகள் பார்த்து வருகிறேன்.

அதுமட்டுமின்றி இப்போது பாலியல் தொழிலாளிகளாக இருக்கும், பெண்களிடம் இந்த தொழிலில் இருக்கும் விபரீதம், மட்டும் தான் அனுபவித்த துயரங்களை கூறி, அதிலிருந்து அவர்களை என்னால் முடிந்த அளவிற்கு மீட்டு வேறு வேலைகள் கிடைக்க உதவி செய்து வருகிறேன் என்று கூறியுள்ளார்.

இவருக்கு இப்போது 5 குழந்தைகள் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அதைப் பற்றி அவர் எதுவும் தெரிவிக்கவில்லை.

மேலும் தற்போது 38 வயதாகும் இவர் South Sheild பகுதியில் இருக்கும் Bright Futures என்ற தொண்டு நிறுவனத்தில் உறுப்பினராக இருந்து ஏராளமான பெண்களுக்கு உதவி செய்து வருகிறார்.

மேலும் அந்த தொண்டு நிறுவனமும், கைவிடப்பட்ட, மிகவும் கஷ்டப்படும் பெண்களுக்கு உதவி செய்து வருகிறது. இந்த தொண்டு நிறுவனத்திற்கான ஆப் இன்னும் சில மாதங்களில் வெளிவரவுள்ளதாகவும் கூறப்படுகிறது. பிரித்தானியாவில் பாலியல் தொழில் செய்வது குற்றமில்லை, ஆனால் அதை வைத்தே சில குற்றச்சம்பவங்கள் நடப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers