157 பேருடன் பலியான பிரித்தானிய பெண்ணின் முதல் புகைப்படம் வெளியீடு: ஏற்கனவே எச்சரித்தேன்... கண்கலங்கும் தந்தை!

Report Print Vijay Amburore in பிரித்தானியா

எத்தியோப்பியாவில் 157 பேருடன் விமான விபத்தில் சிக்கி பலியான 7 பிரித்தானியர்களில் முதல் இளம்பெண்ணின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

எத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து கென்யாவின் நைரோபி நோக்கி சுமார் 157 பயணிகளுடன், இன்று காலை 8.38 மணிக்கு புறப்பட்ட எத்தியோப்பிய ஏர்வேஸ் விமானம், கிளம்பிய 6 நிமிடங்களில் தரையில் விழுந்து நொறுங்கியது.

இந்த சம்பவத்தில் விமானத்தில் பயணித்த 157 பேரும் இறந்துவிட்டதாக விமான நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்தது. அதேசமயம் சம்மந்தப்பட்ட குடும்பத்தாருக்கு தங்களுடைய ஆழ்ந்த இரங்கல்களையும் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கும் இந்த சம்பவத்திற்கு உலகம் முழுவதிலுமிருந்து பலரும் தங்களுடைய ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் விமான விபத்தில் 7 பிரித்தானியர்களுடன் சேர்ந்த பலியான ஜோனா டூல் (33) என்கிற பெண்ணின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து கவலை தெரிவித்துள்ள ஜோனாவின் தந்தை அட்ரியன், விமான விபத்தில் என்னுடைய மகளும் இறந்துவிட்டார் என்பதை நண்பர் ஒருவர் போன் செய்து உறுதி செய்தார்.

என்னுடைய மகள் செய்வது வேலை அல்ல, அது ஒரு தொழில். குழந்தையாக இருந்ததிலிருந்து வேறு எதையுமே செய்ய விரும்பவில்லை. ஆனால் 8 வயதிலே விலங்கு நலத்திட்டத்தில் வேலை செய்தார்.

ஜோனா மிகவும் மென்மையானவர், அன்பானவர். ஆவர் செய்யும் வேலையை பற்றி எல்லோரும் அவளை மிகவும் பெருமையாக பேசுவார்கள்.

உண்மையிலேயே அவரை பற்றி ஒரு கெட்ட வார்த்தையை கூட நீங்கள் கேள்விப்பட்டிருக்க முடியாது.

கல்லூரியில் கூட தன்னுடைய ஆலோசகரிடம் விலங்குகள் மத்தியில் வேலை செய்ய விரும்புவதாக கூறினார். ஆனால் அதற்கு அந்த ஆலோசகர் எதிர்ப்பு தெரிவித்தார். என்னால் மறக்க முடியாத சம்பவம் அது.

எப்படியோ அந்த வேலை தான் தற்போது அவளை சர்வதேச அரங்கிற்கு எடுத்து சென்றது. கடந்த 15 ஆண்டுகளாக அவர் சர்வதேச விலங்கு நல அமைப்புகளுக்காக வேலை செய்து வருகிறார்.

இதற்காக உலகெங்கிலும் பல பயணிகள் ஈடுபடுத்தப்படுகிறார்கள். தனிப்பட்ட முறையில் அதில் என் மகளும் ஒருவராக இருக்க வேண்டும் என நான் விரும்பியதில்லை. அப்படி ஒரு வேலை வியடமாக தான் 12 பேருடன் கென்ய தலைநகரில் நடைபெற்ற ஒரு சந்திப்பிற்காக சென்ற போது, இந்த விபத்து நடந்துள்ளது. அவள் இல்லாத வாழ்க்கையை கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை என தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers