இளவரசி மேகன் மெர்க்கல் போன்று அழகாக வேண்டும்: முகத்தில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட பெண்

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா

பிரித்தானிய இளவரசி மேகன் மெர்க்கல் போன்று இருக்க வேண்டும் என்பதற்காக அமெரிக்காவை சேர்ந்த பெண்மணி ஒருவர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளார்.

3 குழந்தைகளின் தாயானா Xochytl Greer தற்போது அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் வசித்து வருகிறார்.

இவருக்கு பிரித்தானிய இளவரசி மேகன் மெர்க்கல் என்றால் மிகவும் ஆசை. அவரது அழகு என்னை வெகுவாக கவர்ந்துவிட்டது, இதனால் அவரைபோன்று மாறுவதற்கு ஆசைப்பட்டு £19,000 பவுண்ட் செலவு செய்து மூக்கு, புருவமம், வாய் உட்பட்ட பகுதிகளை பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்துள்ளேன்.

ஆனால், அறுவை சிகிச்சைக்கு பின்னர் நான் மேகன் மெர்க்கல் போன்று இல்லை என கருத்து கூறுகின்றனர்.

இருப்பினும், தற்போது அறுவை சிகிச்சைக்கு பின்னர்தான் எனக்கு நம்பிக்கை வந்துள்ளது. நான் அவரை போன்று முழுவதுமாக மாறுவேன், எனது அழகில் தற்போது அதிக கவனம் எடுத்துக்கொள்கிறேன்.

பார்ப்பதற்கு பெரிய ஒற்றுமை இல்லை என்றாலும், அவரது மூக்கும், எனது மூக்கும் அப்படியே ஒன்றாக உள்ளது, அவரை போன்ற அழகுடன் வருவேன் என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers