டயானாவிடம் பேச மறுத்த இளவரசர் வில்லியம்: கோபமும் பாசமும்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இளவரசி டயானாவின் பேட்டியால் கோபமடைந்த அவரது மகன் வில்லியம், தன் தாயுடன் பேச மறுத்தது தொடர்பான செய்திகள் வெளியாகியுள்ளன.

1995ஆம் ஆண்டு பிரித்தானிய இளவரசி டயானா, தனது கணவருக்கும் கமீலாவுக்கும் இடையிலுள்ள தவறான தொடர்பு குறித்தும், தானும் அவருக்கு உண்மையாக இருக்கவில்லை என்பது குறித்தும் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்தார்.

அந்த பேட்டியில் டயானா, சார்லசால் மகாராணிக்குப் பிறகு மன்னராக தாக்குப்பிடிக்க முடியுமா, என்பது குறித்தும் கேள்வி எழுப்பியிருந்தார்.

அந்த பேட்டியில் தனது தந்தையைக் குறித்து டயானா கூறிய விடயங்கள் 13 வயது வில்லியமை காயப்படுத்த, அவர் மிகவும் கோபமடைந்ததாக ராஜ சுயசரிதைகள் எழுதும் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதற்கு பிறகு அவர் டயானாவுடன் பேச மறுத்ததாக அந்த எழுத்தாளர் தெரிவிக்கிறார். தான் செய்யப்போவதை தன்னிடம் கூறாததற்காகவும், தனது தந்தையைக் குறித்து தவறாக பேசியதற்காகவும், டயானாவின் நண்பரான James Hewittஐக் குறித்து பேசியதற்காகவும் வில்லியத்திற்கு தன் தாய் மீது கோபம் ஏற்பட்டது. இது நடந்தது 1995ஆம் ஆண்டு.

அதே நேரத்தில் 1994ஆம் ஆண்டு தனது தாயைக் குறித்து James Hewitt ஒரு புத்தகம் எழுதியபோது, அதில் தனக்கும் இளவரசி டயானாவுக்கும் தவறான தொடர்பு இருந்ததாக எழுதியபோது, முதலில் டயானாவுக்கு ஆறுதல் கூறியவர் வில்லியம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு பாக்ஸ் நிறைய சாக்லேட்டுகள் கொண்டு வந்து, அதை டயானாவிடம் கொடுத்து, அம்மா, நீங்கள் மிகவும் காயப்பட்டிருக்கிறீர்கள் என்று எண்ணுகிறேன், இவை உங்களை மீண்டும் புன்னகைக்க வைப்பதற்காக, என்று கூறியிருக்கிறார் அவர், அப்போது வில்லியமுக்கு வயது 12.


மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers