காணாமல் போன பிரித்தானியா இளம் பெண்..6 நாட்களுக்கு பின் கிடைத்த அதிர்ச்சி தகவல்

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவைச் சேர்ந்த 23 வயது இளம் பெண் காணமல் போனதாக கூறப்பட்ட நிலையில், அவர் இறந்துவிட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவின் Oxfordshire நகரத்தின் Witney பகுதியைச் சேர்ந்தவர் Catherine Shaw. 23 வயதான இவர் கடந்த செப்டம்பர் மாதத்திலிருந்து தனியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

இதற்கு முன்னரும் இதே போன்று மெக்சிகோ மற்றும் கலிபோர்னியாவிற்கு இவர் சுற்றுப்பயணம் சென்றுள்ளார்,

இந்நிலையில் இவர் கடந்த 5-ஆம் திகதி கவுதமாலாவின் Mayachik-ல் இருக்கும் ஹோட்டலை விட்டு வெளியேறிய அவர் திரும்பவேயில்லை.

இதனால் இவரை தேடும் பணி மும்பரமாக நடைபெற்று வந்தது. இதையடுத்து இவரின் ஜாக்கெட் கவுதமாலாவில் இருக்கும் மலை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டதால், அவரைப் பற்றிய தகவல் உறுதியானது.

அதன் பின் தொடர்ந்து நடைபெற்று வந்த தேடலில் அவர் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து வெளியான அறிக்கையில், கடந்த 5-ஆம் திகதி Mayachik-ல் இருக்கும் ஹோட்டலை விட்டு உள்ளூர் நேரப்படி காலை 1.37 மணிக்கு வெளியேறிய இவர், அதன் பின் மீண்டும் 3.19-க்கு வந்துள்ளார்.

இதைத் தொடர்ந்து மீண்டும் 5.23 மணிக்கு லேக் பகுதியை நோக்கி சென்ற இவர் திரும்பவேயில்லை. தற்போது அவர் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...