157 பேருடன் நொறுங்கிய விமானம்: பிரித்தானியாவின் அதிரடி அறிவிப்பு

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா

பிரித்தானியாவின் சிவில் ஆணையம் போயிங் 737 MAX விமானத்திற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடை விதித்துள்ளது.

157 பேரை பலி கொண்ட எத்தியோப்பியா விமான விபத்தைத் தொடர்ந்து, போயிங் 737 மேக்ஸ் 8 விமானங்களில் பயணிக்கும் பயணிகளுக்கு பாதுகாப்பு இருக்காது என கருதி சீனா தற்காலிக தடை விதித்தது.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனமும் போயிங் 737 மேக்ஸ் 8 விமானங்களை இயக்காமல் தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது.

இந்தோனேஷியாவும் பதினொன்று 737 MAX 8 ரக விமானங்களை இயக்காமல் நிறுத்திவைத்துள்ளது. பிரேசில், அர்ஜென்டினா நாடுகளும் நிறுத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் பிரித்தானியா தடை விதித்துள்ளது.

பிரித்தானியாவில் Tui Airways மற்றும் Norwegian ஆகிய இரண்டு விமான நிறுவனங்கள் 737 MAX 8 ரக விமானம் பயன்பாட்டில் உள்ளது.

பிரித்தானிய சிவில் விமான போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், விமான விபத்து குறித்து போதுமான தகவல்கள் எங்களுக்கு கிடைக்கவில்லை, இந்த பிரச்சனையை தீவிரமாக கண்காணித்து வருகிறோம்.

இதனால், தற்போது குறித்த விமானத்திற்கு தடை விதித்துள்ளோம் என்றும் பயணிகளின் சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம் என இரண்டு விமான நிறுவனங்களும் தெரிவித்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்