சொந்த மகளை கர்ப்பமாக்கிய தந்தை: முதன்முறை மௌனம் கலைத்த மகன்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானியர் ஒருவர் தனது தனது சொந்த மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததையடுத்து அவள் கர்ப்பமுற்றாள்.

Lancashireஐச் சேர்ந்த, தற்போது 27 வயதாகும் Shane, தனது தந்தை Sean Brown தனது அக்கா Carry-Annஐ பாலியல் துஷ்பிரயோகம் செய்யும்போது அவளுக்கு வயது 12. என்றாலும் மனதளவில் அவள் ஒரு ஏழு வயது சிறுமியாகத்தான் இருந்தாள்.

Carry-Ann கர்ப்பமுற்றதால், அவளை Sean Brownஇடமிருந்து மீட்ட பொலிசார், நீதிமன்ற உத்தரவுப்படி அவளுக்கு கருக்கலைப்பு செய்தனர்.

காப்பகத்திலிருந்த Carry-Annஐ நைஸாக வெளியே அழைத்துக் கொண்ட வந்த அவளது தந்தை, அவளுக்கு தூக்க மாத்திரைகள் கொடுத்து காரில் ஏற்றி, வேண்டுமென்றே காரை விபத்துக்குள்ளாக்கியிருக்கிறார்.

இருவரும் இறந்துவிட வேண்டும் என்று அவர் முயன்றாலும், விபத்தில் ஏற்பட்ட காயங்களால் Carry-Ann இறந்து விட, அவளது தந்தை உயிர் பிழைத்தார். 2004ஆம் ஆண்டு Sean Brownக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான Shane, 2023ஆம் ஆண்டு அவரது தந்தை Sean Brown விடுதலையாக இருக்கும் நிலையில், முதன்முறையாக மவுனம் கலைத்திருக்கிறார்.

அவர் ஒரு மோசமான ராட்ஷசன் என்று தனது தந்தையைக் குறித்துக் கூறும் Shane, அவரை சிறையிலிருந்து வெளியே விடவே கூடாது என்கிறார்.

எனது தங்கைக்கு அவர் செய்ததை என்னால் மன்னிக்கவே முடியாது என்று கூறும் Shane, அவர் மீண்டும் சூரிய ஒளியைப் பார்க்கவே கூடாது என்கிறார்.

அவர் என் தங்கையின் வாழ்வை நாசமாகி விட்டார், வெளி உலகில் அவரது வாழ்வை வாழ அவரை ஒருபோது அனுமதிக்கக்கூடாது என்கிறார் Shane.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்