இறப்பதற்கு முன் தாய் கொடுத்த திருமண பரிசு: 1 வருடத்திற்கு பின் பார்த்து தேம்பி அழுத மகள்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானியாவில் இறப்பதற்கு முன் திருமணத்திற்காக தாய் கொடுத்த பரிசினை, 1 வருடத்திற்கு பின் பார்த்த மகள் தேம்பி தேம்பி அழுதுள்ளார்.

பிரித்தானியாவை சேர்ந்த எம்மா லெட் (36) என்கிற பெண்ணுக்கு, 2016ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அவருடைய அலுவலகத்தில் ஒன்றாக பணிபுரியும் ரிச்சர்ட் வில்சன் என்கிற நபருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

நிச்சயதார்த்தத்திற்கு தன்னுடைய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

இதனால் பெரும் மகிழ்ச்சியில் இருந்த அவருடைய அம்மா 2017ம் ஆண்டு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனை சென்றபோது புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

உடனடியாக இறப்பதற்கு முன் மகளின் திருமணத்திற்கு பரிசு கொடுக்க வேண்டும் என்பதற்காக ஒரு ஜோடி காலனிக்கு ஆர்டர் கொடுத்துவிட்டு இறந்துள்ளார்.

அதன்படி எம்மாவிற்கு வந்த £189 மதிப்புள்ள ஷூவை திறந்து பார்த்தபோது, அவருடைய அம்மா அவருக்காக பணம் செலுத்தி வாங்கியிருப்பது தெரியவந்தது.

எதார்த்தமாக அந்த ஷூவின் பின்பகுதியை திருப்பியுள்ளார். அதில், உங்கள் திருமண நாளில் என்னிடம் இருந்து ஒரு பரிசு கிடைத்திருக்க வேண்டும். உங்களுடைய திருமண காலணிகள் தான் என்னுடைய அன்பளிப்பு.

"ஒரு அற்புதமான நாளாக இருக்கும் என நான் நம்புகிறேன். நிறைய காதல் மற்றும் பெரிய அணைப்புடன் உன்னுடைய XXX" என ரகசியமாக அதில் எழுதப்பட்டிருந்தது.

இதனை பார்த்ததும் எம்மா தேம்பி தேம்பி அழ ஆரம்பித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், என்னுடைய அம்மா இல்லாமல் திருமண திட்டத்தை செயல்படுத்துவது எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. எனக்கு நிறைய கண்ணீர் வந்தது.

நான் இதை முற்றிலும் எதிர்பார்க்கவில்லை. எங்களுக்கு இது ஒரு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. முதலில் ஒரு ஷூவை வெளியில் இழுத்து படித்து பார்த்தேன். ஆனால் அது யார் அனுப்பியது என்பது எனக்கு தெரியவில்லை.

சிறிது நேரத்தில் நான் அழ ஆரம்பித்துவிட்டேன். என்னால் மூச்சு விட முடியவில்லை. பேசவும் முடியவில்லை என தெரிவித்தார்.

எம்மாவின் அம்மா தான் இறந்த பிறகு தான் அந்த பரிசுப்பொருளை திறக்க வேண்டும் என அவருடைய குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு கடிதம் எழுதியிருந்தார். ஆனால் அவருடைய மகளுக்கு ஒரு கடிதம் கூட எழுத வாய்பில்லாம் அமைந்துவிட்டது.

ஆன்லைன் ஷாப்பிங் கடை வைத்திருந்த Amanda என்பவரிடம் தான் எம்மாவின் தாய் காலனியை வடிவைமைக்க ஆர்டர் கொடுத்திருந்துள்ளார்.

இதுகுறித்து பேசுகையில், என்னுடைய அம்மாவிடம் இருந்து நான் ஒரு கடிதம் கூட பெறவில்லை. அதனால் எனக்கு இதுதான் மிகவும் விசேஷமானது. இதுபோன்ற ஒன்றை என்னால் உருவாக்க முடியாது. இது ஒரு உணர்ச்சிகரமான காலணிகள்.

இந்த காலணிகள் எனக்கு சிறிது ஆறுதல் அளிக்கும். என்னுடைய அம்மாவுடன் சேர்ந்து நடப்பதை போன்ற உணர்வை தரும் என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்