லண்டன் வீதியில் பெரிய கத்தியுடன் பீதியை ஏற்படுத்திய இளைஞன்..அதன் பின் நடந்த சம்பவத்தின் வீடியோ

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவில் இளைஞன் ஒருவன் கத்தியுடன் பொலிசாருட வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், பொலிசார் மின்னதிர்வு ஏற்படுத்தக் கூடிய துப்பாக்கியால் சுட்டு அவரை கைது செய்தனர்.

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் Leytonstone பகுதியில் இருக்கும் தேசிய நெஞ்சாலையில் கடந்த பிப்ரவரி மாதம் 13-ஆம் திகதி உள்ளூர் நேரப்படி காலை 8 மணிக்கு சுமார் 30 வயது மதிக்கத்தக்க இளைஞன் கத்தியுடன் சுற்றுவதாகவும், இதனால் பயமாக இருப்பதாகவும் பொலிசாருக்கு தகவல் வந்துள்ளது.

இதையடுத்து பொலிசார் அங்கு விரைந்து வந்த போது அந்த இளைஞன் பொலிசாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பொலிசார் அந்த நபரை பல முறை எச்சரித்தும், அவன் கத்தியை கையில் வைத்துக் கொண்டு ஓடியதால், மின்னதிர்வு ஏற்படுத்தக் கூடிய துப்பாக்கியால், அந்த இளைஞனின் காலில் சுட்டனர்.

அதன் பின் அவனை பொலிசார் கைது செய்து விசாரித்த போது, மனநிலை பாதிக்கப்பட்டவன் என்பது தெரியவந்தது.

இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ இப்போது வெளியாகியுள்ளது. லண்டனில் ஏற்கனவே கத்தி குத்து சம்பவம் அதிகரித்து வரும் நிலையில், இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருவதால், இணையவாசிகள் பலரும் அதிர்ச்சிகரமான கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்