லண்டன் மேயர் கொல்லப்பட வேண்டும்: நியூசிலாந்தில் தாக்குதல் நடத்திய குற்றவாளியின் அம்பலமான சதித்திட்டம்!

Report Print Vijay Amburore in பிரித்தானியா

நியூசிலாந்தில் தாக்குதல் நடத்தி 49 பேரை ஈவிரக்கமின்றி சுட்டுக்கொலை செய்த குற்றவாளி, லண்டன் மேயரையும் கொல்ல வேண்டும் என தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நியூசிலாந்தில் நாட்டில் கிறிஸ்ட்சர்ச் பகுதியில் உள்ள இரண்டு மசூதிகளில், மதிய தொழுகை நேரத்தின் போது துப்பாக்கி சூடு தாக்குதல் நடந்துள்ளது.

இதில் 40 பேர் பலியானதோடு, 20க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக தீவிர வலதுசாரி ஆதரவாளரான அவுஸ்திரேலியாவை சேர்ந்த ப்ரெண்டான் டிரான்ட் (28) உடன் சேர்த்து 3 ஆண்கள் மற்றும் ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாக்குதலுக்கு முன்பாக ப்ரெண்டான் வெளியிட்ட 87 பக்க அறிக்கையை கைப்பற்றி பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதில் பல்வேறு அதிர்ச்சிகரமான திட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

அதில், நார்வே நாட்டில் கடந்த 2011-ம் ஆண்டு 77 பேரை கொலை செய்த ஆண்டர்ஸ் பெஹ்ரிங் பிரீவிக் மூலம் ஈர்க்கப்பட்டு தான் இத்தகைய தாக்குதலில் ஈடுபட்டிருக்கிறார்.

முதலில் தாக்குதல் நடத்துவதற்கு டுனீடினில் பகுதியில் உள்ள மசூதியை தான் ப்ரெண்டான் திட்டமிட்டுள்ளான். ஆனால் அல் நூர் மற்றும் மஸ்ஜித் மசூதிகளில் ஆட்கள் கூட்டம் அதிகமாக இருப்பதை பார்த்து தன்னுடைய இலக்கினை மாற்றியுள்ளான்.

அதேபோல லண்டன் மேயர் சாதிக் கான் கொல்லப்பட வேண்டும் எனவும் அவருடைய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளான்.

முன்னதாக தாக்குதலுக்கு பின் லண்டன் மேயர் வெளியிட்ட அறிக்கையில், நியூசிலாந்தில் அப்பாவி பொதுமக்கள் இன்று அதிகாலை கொலை செய்யப்பட்ட செய்தி நெஞ்சை பதற வைக்கிறது.

கிறிஸ்ட்சர்ச் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு லண்டன் மக்கள் தங்கள் இரங்கலை தெரிவிக்கின்றனர். லண்டன் எப்பொழுதுமே பயங்கரவாதத்திற்கு எதிரான் பன்முகத்தன்மையை கொண்டிருக்கிறது என குறிப்பிட்டிருந்தார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers