தெரஸா மே பதவி விலகுவதாக உறுதியளித்தால் அவரது ஒப்பந்தத்திற்கு ஆதரவு: நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிரடி!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

தனது பிரெக்சிட் ஒப்பந்தம் நிறைவேர வேண்டுமானால், பிரித்தானிய பிரதமர் தெரஸா மே பதவி விலக வேண்டியிருக்கும் என வெளிப்படையாகவே நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த வாரம், தனது ஒப்பந்தம் மீதான மூன்றாவது வாக்கெடுப்பு ஒன்றிற்கு வாக்களிக்குமாறு தெரஸா மே நாடாளுமன்ற உறுப்பினர்களை கேட்டுக் கொள்ள இருக்கும் நிலையில், பிரெக்சிட் நீண்ட காலம் தாமதமாவதை தடுக்க அதுதான் ஒரே வழி என்பதை அவர் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

லிஸ்பன் ஒப்பந்தத்தின் 50ஆவது பிரிவை நீட்டிக்க கோரி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்றிரவு வாக்களித்துள்ள நிலையில், தனது ஒப்பந்ததை நாடாளுமன்றம் நிறைவேற்றினால், அதற்கு ஜூன் மாதம் வரை ஆகலாம் என்றும் அவர்கள் மூன்றாவது முறையும் அதை நிராகரித்தால், இன்னும் நீண்ட காலம் ஆகலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மேயின் முன்னாள் கொள்கை போர்டின் தலைவரான George Freeman, மே ராஜினாமா செய்வதாக உறுதியளிப்பதுதான் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெறச்செய்வதற்கான ஒரே வழி என்று வெளிப்படையாகவே கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்