3 கணவன்கள்... 15 குழந்தைகளை கொலை செய்த பெண்: பிரித்தானியாவை கதிகலங்க வைத்த அழகிய கொலைகாரி

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானியாவில் மிகப்பெரிய கொடூர சீரியல் கில்லர் என கருதப்படும் ஹரோல்ட் ஷிப்டனுக்கு முன்பாக மேரி ஆன் பருட்டன் என்கிற பெண் தான் முதன்முதலாக சீரியல் கொலைகளில் ஈடுபட்டுள்ளார்.

வியக்கத்தக்க அழகி என வர்ணிக்கப்படும் மேரி, தன்னுடைய சொந்த தாய், சொந்த குழந்தைகள் 8 பேர், மாற்றான் தாய் குழந்தைகள் 7 பேர். மாற்றான் தாய் ஒருவர், 3 கணவன்கள், காதலன் மற்றும் நண்பன் என மொத்தம் 21 பேரை கொலை செய்துள்ளார்.

இவர்களை அனைவரையும் கொலை செய்து அவர்களுடைய காப்பீட்டு தொகையை கைப்பற்றியிருக்கிறார். தேயிலையில் ஆர்சனிக் என்கிற விஷத்தை கலந்து கொடுத்து தான் இந்த கொலைகளை செய்துள்ளார்.

ஆர்சனிக் விஷம் என்பது இரைப்பை வலியுடன் சிறிது சிறிதாக மனிதனுடைய உயிரை எடுக்க கூடியது. இது 1800 களில் பல பொதுவான மருத்துவ நிலைமைகளுடன் ஒத்துப்போனதால், கொலை என்பதை கண்டறிவது பொலிஸாருக்கு மிகவும் சிரமமாக இருந்தது.

சுந்தர்லாந்திற்கு அருகாமையில் உள்ள பகுதியில் பிறந்த மேரி, 20 வயதாக இருந்தபோது அவரது முதல் கணவர் வில்லியமை திருமணம் செய்துகொண்டார். அதன் பிறகு தான் கொலை செய்யத் துவங்கியதாக நம்பப்படுகிறது.

பிளைமவுட்டில் வாழ்ந்து கொண்டிருந்த போது, அவரும் வில்லியமும் ஐந்து குழந்தைகளைக் கொண்டிருந்தனர். அவர்களில் நான்கு பேர் 'டைபாய்டு காய்ச்சலில்' இறந்தனர். பின்னர் அந்த ஜோடி வடக்கு கிழக்குக்கு திரும்பிச் சென்றனர். அங்கு மேலும் மூன்று குழந்தைகளை இழந்தனர்.

1865 ஆம் ஆண்டில், வில்லியம் காப்பீட்டு ஊதியத்துடன் அவரது மனைவியை விதவையாக தனித்து விட்டு, தனது குழந்தைகளைப் போலவே குடல் நோயால் உயிரிழந்தார்.

ஒரு வருடம் கழித்து, அவளுடைய இரண்டாவது கணவர் ஜார்ஜ் வார்டு, குடலியல் சிக்கல் நோயால் உயிரிழந்தார். அப்போது மிகப்பெரிய காப்பீட்டு தொகையை மேரி கைப்பற்றினார்.

1866 ஆம் ஆண்டில், மேரி அவரது மூன்றாவது கணவரான ஜேம்ஸ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அதன் பிறகு இறப்புகளும் தொடர்ந்த வண்ணம் இருந்தன. மேரி தன்னுடைய சொந்த தாய் மற்றும் ஜேம்ஸின் சொந்த மகன்கள் என இரண்டு பேரையும் இழந்தார்

மூன்றாவது கணவர் ஜேம்ஸ் அதிக பாசமாக இல்லாததால், நான்காவதாக ஃப்ரெட்ரிக் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

அடுத்த சில மாதங்களில் ஃப்ரெடெரிக், அவர்களின் குழந்தை, ஃப்ரெட்ரிக் சகோதரி, ஃப்ரெட்ரிக் சொந்த குழந்தை சார்லஸ் எட்வர்ட் மற்றும் மேரியின் காதலன் ஜோசப் அனைவரும் வயிற்றுப் பிரச்சினையுடனும் காலமானார்கள்.

இதில் சார்லஸின் மரணம் மட்டுமே பொலிஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவரது உடலை கைப்பற்றி பொலிஸார் விசாரணை மேற்கொண்ட போது, உடலில் ஆர்சனிக் கலந்திருப்பதற்கான தடயங்கள் காணப்பட்டன.

டர்ஹாம் கிரவுன் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த பொழுது மேரி குற்றவாளி என தீர்ப்பிடப்பட்டார். மார்ச் 24, 1873 இல் அவர் டர்ஹாம் கவுண்டி காலாவில் தூக்கிலிடப்பட்டார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்