பிரித்தானியாவில் சரமாரியாக குத்திக்கொலை செய்யப்பட்ட இலங்கை தமிழர்!

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானியாவில் இலங்கை தமிழர் குத்திக்கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், அவரது மனைவியை பொலிஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிரித்தானியாவின் நார்ஃபோக் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்த குமாரதாஸ் ராஜசிங்கம் (57), என்பவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டிருப்பதாக கடந்த சனிக்கிழமை இரவு 11.50 மணிக்கு (உள்ளூர் நேரப்படி) பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் தலை மற்றும் நெஞ்சு பகுதியில் கத்திக்குத்து காயங்களுடன் கிடந்த ராஜசிங்கத்தை மீட்டு , பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக அவருடைய 57 வயதான மனைவி ஜெயமலரை பொலிஸார் கைது செய்து விசாரணையில் ஈடுப்பட்டனர்.

இதுகுறித்து பொலிஸார் கூறுகையில், கொலை சம்பவத்தில் வேறு எந்த நபருக்கும் தொடர்பு இருப்பதற்கான அறிகுறிகள் தெரியவில்லை. தம்பதியினர் மட்டுமே அந்த சமயம் ஒன்றாக இருந்துள்ளனர். விசாரணையின் ஆரம்பித்த கட்டத்தில் இருக்கிறோம். விரைவில் கொலைக்கான காரணத்தினை கண்டறிவோம்.

தம்பதியினருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். 2008-ம் ஆண்டு குமாரதாஸ் £195,000 செலவில் வாங்கிய மூன்று படுக்கையறை கொண்ட வீட்டில் தான் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். தற்போது அந்த வீடு முழுவதும் பொலிஸாரின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இலங்கையை பூர்விகமாக கொண்ட குமாரதாஸ், தன்னுடைய வீட்டிலிருந்து 100மைல்கள் தூரத்தில் சூப்பர் மார்க்கெட் ஒன்றினை சொந்தமாக வைத்து நடத்தி வந்துள்ளார். ஆனால் மூன்று வருடங்களுக்கு முன்னர் இந்த வியாபாரத்தை கைவிட்டதாக கூறப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்