பிரித்தானியாவில் ஒரே இரவில் கோடீஸ்வரரான நபர்: கூரையை பிய்த்துக்கொண்டு கொட்டிய அதிர்ஷ்டம்... 71 மில்லியன் ஜாக்பாட்

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா

பிரித்தானியாவை சேர்ந்த Ade Goodchild என்ற 59 வயது நபருக்கு கூட்டுறவு நிகழ்ச்சியின் (co -op in Hereford) மூலம் 71 மில்லியன் யூரோ கிடைத்துள்ளதால் ஒரே இரவில் கோடீஸ்வரர் ஆகியுள்ளார்.

இரண்டு முறை விவாகரத்து செய்துகொண்ட Ade, இதுவரை தனது வாழ்க்கையில் பெரிய திட்டங்கள் ஏதும் இருந்ததில்லை என கூறியுள்ளார்.

ஒரே இரவில் இவ்வளவு பணம் கைக்கு வந்துள்ளதால் நான் பெரிதான உயர்ந்தது போன்று உணர்கிறேன். தற்போது கிடைத்த பணத்தினை பெண்களுக்கும், மது அருந்துவதற்கும் பயன்படுத்தப்போகிறேன் என நகைச்சுவையாக கூறிய இவர், எனது வாழ்க்கையில் இரண்டு பெண்களுடனான திருமண தோல்விக்கு பிறகு உண்மையான காதலை தேடிக்கொண்டிருக்கிறேன் என கூறியுள்ளார்.

jacuzzi வசதியுடன் கூடிய புதிய வீடு ஒன்றை தற்போதைக்கு வாங்க போகிறேன். அங்கு பணிபுரிய சில ஊழியர்க்ள் மற்றும் Grand Canyon, Pyramids ஆகிய இடங்களுக்கு சுற்றுலா செல்லப்போகிறேன் என கூறியுள்ளார்.

மேலும், நான் தோட்ட வேலைகள் எதுவும் இதுவரை செய்தது கிடையாது, இருப்பினும் புதிதாக வாங்கும் வீட்டில் தோட்டங்கள் செய்து அதனை எனது தேவைக்காக பயன்படுத்திக்கொள்ளப்போகிறேன்.

எனது முதல் முக்கியத்துவம் , பெற்றோருடன் சேர்ந்து புதிய வீட்டை பார்ப்பது, எனக்கு கிடைத்த பணத்தினை அவர்களுக்கும் செலவிட நினைக்கிறேன் என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்