22 மணிநேரம்..லண்டனில் மிகவும் மோசமான சிறையில் அடைக்கப்பட்ட இந்திய கோடீஸ்வரைப் பற்றி வெளியான தகவல்

Report Print Santhan in பிரித்தானியா

இந்தியாவின் கோடீஸ்வரரான நிரவ்மோடி லண்டனில் மோசமான சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மும்பையைச் சேர்ந்தவர் நிரவ் மோடி. வைர வியாபாரியான இவர் பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13,000 கோடி கடன் பெற்று அதை திருப்பி செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு உள்ளது.

இதனால் அவர் மீதும் அவரின் குடும்பத்தினர் மீதும் சிபிஐ அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறது.

இந்த தகவல் வெளியில் வருவதற்கு முன்னரே அவருடைய குடும்பத்தினர் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றுவிட்டதாக செய்தி வெளியானது.

சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரன்ட்டை பிறப்பித்திருந்தது.

அதுமட்டுமின்றி கடந்த ஆண்டு, இன்டர்போல் அமைப்பும் நிரவ் மோடிக்கு ரெட் கார்னர் நோட்டீஸ் ஒன்றை வெளியிட்டது.

இந்நிலையில் நிர்வ மோடி போலி பாஸ்போர்ட் பயன்படுத்தி பல நாடுகளுக்கு சுற்றி வந்ததால், அவர் எங்கிருக்கிறார் என்பதில் குழப்பம் நிலவி வந்த நிலையில், அவர் பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில் இருப்பதை அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் ஒன்று உறுதி செய்தது.

அதுமட்டுமின்றி அவரை பேட்டி எடுத்தது தொடர்பான வீடியோவையும் வெளியிட்டிருந்தது.

இதையடுத்து நிர்வ் மோடி நேற்று ஸ்காட்லேண்ட் யார்ட் பொலிசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட அவர் ஜாமீன் கோரியுள்ளார். ஆனால் ஜாமீன் மறுக்கப்பட்டதால்,லண்டனின் மிகப்பெரிய சிறையான வேண்ட்ஸ்வொர்த் சிறையில் அடைக்கப்பட்டார்.

அதிக ஆபத்தானவர்கள் என்று வகைப்படுத்தப்படாத B கிளாஸ் கைதிகள் அடைக்கப்பட்டிருக்கும் அந்த சிறையில் மொத்தம் ஆயிரத்து 400 பேர் அடைக்கப்பட்டுள்ளனர்.

மிகுந்த கட்டுப்பாடுகளால் பிரித்தானியாவின் மோசமான சிறை என அழைக்கப்படும் வேண்ட்ஸ்வொர்த் சிறையில் நாளொன்றுக்கு 22 மணி நேரம் சிறை அறைக்குள் தான் இருக்க வேண்டும்.

வார இறுதி நாட்களில் இந்நேரம் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது. கைதிகள் சிலர் எப்போதும் காயங்களுடன் தான் இருப்பார்கள் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளன.

குறிப்பாக கடந்த மாதம் ஒரு சிறைக் கைதி தப்பிவிட்டதால் முன்பு இருந்ததை விட இப்போது கட்டு கட்டுப்பாடுகள் மிகவும் அதிகமாகிவிட்டதாம், சொகுசான வாழ்க்கை வாழ்ந்த வைர வியாபாரி நிரவ் மோடிக்கு இந்தியாவுக்கு நாடு கடத்தும் முன்பே தண்டனை தொடங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்