லண்டன் ரயில் தண்டவாளத்தில் அடுத்தடுத்து இரண்டு பேர் சடலமாக மீட்பு!

Report Print Vijay Amburore in பிரித்தானியா

லண்டனில் ஹாக்னி விக் மற்றும் ஸ்ட்ராட்போர்டுக்கு இடையேயான ரயில் தண்டவாளத்தில் இரண்டு பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

லண்டனில் ஹாக்னி விக் மற்றும் ஸ்ட்ராட்போர்டுக்கு இடையிலான ரயில் தண்டவாளத்தில் மின்சார தாக்குதலால் படுகாயங்களுடன் ஒருவர் உயிருக்கு போராடுவதாக, நள்ளிரவு 1 மணிக்கு பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், பலத்த காயங்களுடன் இருந்த நபருக்கு முதலுதவி அளித்தனர். ஆனால் ஆவர் அடுத்த சில நிமிடங்களில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதேபோல் 2.31 மணிக்கு மற்றொரு நபரும் மின்சார தாக்குதலுக்குட்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், ஸ்ட்ராட்போர்டு மற்றும் டால்டன் கிங்ஸ்லாந்து இடையேயான ரயில் சேவைகள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட இரண்டு நபர்களும் ஏன் தண்டவாளத்திற்கு சென்றார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை, இதுகுறித்த விசாரணை தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவமானது வெஸ்ட் ஹாம் யுனைடெட் நிறுவனத்தின் 66,000 திறன் கொண்ட மைதானத்திற்கு அருகே நடைபெற்றுள்ளது. இங்கு கடந்த 2012ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்