பிரித்தானியாவில் உள்ள 4 மசூதிகளின் ஜன்னல் மற்றும் கதவுகளை நொறுக்கிய மர்மநபர்கள்: நள்ளிரவில் நடந்த சம்பவம்

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவில் உள்ள 4 மசூதியின் ஜன்னல்கள் மற்றும் கதவுகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ள நிலையில் இது குறித்து பொலிசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.

Birmingham-ல் உள்ள Witton Road Islamic Centre மசூதியில் உள்ளூர் நேரப்படி நள்ளிரவு 1.30 மணிக்கு இச்சம்பவம் நடந்துள்ளது.

மசூதியின் ஏழு ஜன்னல்கள் மற்றும் இரண்டு கதவுகள் சுத்தியலால் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.

அதே போல இன்னும் 3 மசூதிகளிலும் இதே போன்ற சம்பவங்கள் நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதையடுத்து மசூதிக்கு கூடுதல் பொலிஸ் பாதுகாப்பு தேவை என Witton Road Islamic Centre மசூதியின் இமாம், ஷராபட் அலி (66) கோரியுள்ளார்.

பொலிசார் சம்பவம் தொடர்பான பகுதிகளில் உள்ள சிசிடிவி கமெராக்களை ஆய்வு செய்து வருகிறார்கள்.

பொலிசார் கூறுகையில், நியூசிலாந்து மசூதியில் நடந்த சம்பவத்துக்கு பின்னர் இங்குள்ள மசூதிகள், தேவாலயங்கள் உள்ளிட்ட வழிபாட்டு தளங்களுக்கு கூடுதல் ஆதரவும் பாதுகாப்பும் தருகிறோம்.

இரவு நடைபெற்ற சம்பவத்துக்கு நோக்கம் என்னவாக இருக்கும் என இன்னும் தெரியவில்லை.

இது தொடர்பாக யாருக்கேனும் தகவல் தெரிந்தால் எங்களை தொடர்பு கொள்ளலாம் என கூறியுள்ளனர்.

மசூதியின் இமாம் ஷராபட் அலி கூறுகையில், நியூசிலாந்தில் நடந்த சம்பவத்தால் நாங்கள் அதிர்ச்சியில் உள்ளோம்.

இங்கு நாங்கள் 30 ஆண்டுகளாக உள்ளோம், சாதாரணமாக காலையில் 40 பேர் தொழுகைக்காக இங்கு வருவார்கள்.

வெள்ளிக்கிழமையன்று 200லிருந்து 300 பேர் வரை வருவார்கள். நாளை வெள்ளிக்கிழமை தொழுகை, என்ன நடக்க போகிறது என எனக்கு தெரியாது.

எங்களுக்கு பொலிசார் கூடுதல் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்