6 வயது பிரித்தானிய சிறுமி, வன்புணர்வு, கொலை வழக்கில் அதிரடி தீர்ப்பு!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

6 வயது பிரித்தானிய சிறுமி அலீஷா வன்புணர்வு செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கில் தீர்ப்பு வெளியாகியுள்ளது.

ஆரோனை காலவரையரையின்றி காவலில் வைக்க உத்தரவிட்ட நீதிபதி, குறைந்தபட்சம் அவன் 27 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும், எப்படியும் அவன் ஒரு போதும் சிறையிலிருந்து விடுவிக்கப்படக்கூடாது என்றும் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளார்.

கோடை விடுமுறைக்காக தனது பாட்டி வீட்டிற்கு வந்திருந்த பிரித்தானியச் சிறுமி அலீஷா மெக்பைல், ஆரோன் காம்பெல் என்னும் 16 வயதுள்ள ஒருவனால் தூக்கிச் செல்லப்பட்டாள்.

கடற்கரையின் அருகில் இருந்த ஆளரவமற்ற ஒரு கட்டிடத்திற்கு அவளை தூக்கிச் சென்ற ஆரோன், அவளை கொடூரமாக வன்புணர்வு செய்தான்.

பின்னர் அவளை முகத்தையும் கழுத்தையும் நெறித்துக் கொன்றுவிட்டு அங்கிருந்து சென்று விட்டான்.

மறுநாள் ஒரு சிறுமி நிர்வாண நிலையில் இறந்து கிடப்பதைக் கண்ட வழிப்போக்கர்கள், பொலிசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அலீஷாவின் உடலை உடற்கூறு பரிசோதனை செய்த மருத்துவர், தனது அனுபவத்தில் தான் இவ்வளவு மோசமாக காயப்படுத்தப்பட்ட ஒரு உடலை இதுவரை பார்த்ததில்லை என்று கூறுமளவிற்கு அவளது உடலில் 117 காயங்கள் காணப்பட்டன.

வழக்கு விசாரணையின்போது, தொடர்ந்து பொய்களாக கூறி வந்த ஆரோன், அலீஷாவின் தந்தையின் காதலிதான் அவளைக் கொலை செய்து விட்டதாக குற்றம் சாட்டினான். கொலை செய்ததையும், வன்புணர்வு செய்ததையும் தொடர்ந்து ஆரோன் மறுத்து வந்த நிலையில், இன்று வழக்கில் அதிரடியாக ஒரு திருப்பம் ஏற்பட்டுள்ளது.

எட்டு மாதங்களுக்குப் பிறகு முதல் முறையாக அவன் அலீஷாவை வன்புணர்வு செய்ததையும், கொலை செய்ததையும் ஒப்புக் கொண்டுள்ளான்.

இன்று நடந்த, தண்டனை தொடர்பான வழக்கு விசாரணையின்போது, அலீஷாவை சீரழித்து, கொடூரமான கொலை செய்ததை 16 வயதேயான அந்த மோசமான நபர் ஒப்புக் கொண்டுள்ளதாக அவனது வழக்கறிஞரான Brian McConnachie தெரிவித்தார்.

இதற்கிடையில் சற்று முன் இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, ஆரோனை காலவரையரையின்றி காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளதோடு, குறைந்தபட்சம் அவன் 27 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும், எப்படியும் அவன் ஒரு போதும் சிறையிலிருந்து விடுவிக்கப்படக்கூடாது என்றும் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்