Brexit : அடம் பிடிக்கும் தெரஸா மேயும் ஐரோப்பிய ஒன்றியமும்... அடுத்த கட்ட நடவடிக்கைகள்

Report Print Balamanuvelan in பிரித்தானியா

தனது ஒப்பந்தமின்றி பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு வெளியேறாது என பிரித்தானிய பிரதமர் தெரஸா மே அடம்பிடித்து வரும் நிலையில், இன்று அவர் பிரஸ்ஸல்ஸ் புறப்படுகிறார்.

பிரெக்சிட்டுக்கு எட்டு நாட்களே இருக்கும் நிலையில், எப்படியாவது தனது திட்டத்துடன் பிரெக்சிட்டை நிறைவேற்றிவிடவேண்டும் என முயன்று வரும் பிரித்தானிய பிரதமர், நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் உரையாற்றினார்.

பிரச்சினைகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் காரணம் என பொருள்படும் விதத்தில் அவர் ஆற்றிய உரையால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆத்திரமடைந்துள்ளார்கள்.

தங்கள் மீது தெரஸா மே குற்றம் சாட்டுவதாக கோபமடைந்துள்ள அவர்கள், மோசமான வார்த்தைகளால் அவரை திட்டுமளவிற்கு நிலைமை மோசமாகியுள்ளது.

ஆனால் தெரஸா மேயோ ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரை ஐரோப்பிய ஒன்றியத்திடம் கால அவகாசம் கேட்பதற்காக பிரஸ்ஸல்சில் நடைபெறும் உச்சி மாநாட்டிற்கு செல்கிறார்.

அதே நேரத்தில், மே 22க்கு மேல் அவருக்கு அவகாசம் கொடுக்கக்கூடாது என Jean-Claude Juncker முதலான ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கிய தலைவர்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரித்தானியா, மே மாதம் 23ஆம் திகதி முதல் நடைபெற இருக்கும் ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் தேர்தல்களில் கலந்து கொள்ளக்கூடாது என்ற நோக்கில், அதற்கு முன் பிரெக்சிட் நிறைவேற்றப்பட வேண்டும் என அவர்கள் விரும்புவதாகத் தெரிகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...