Brexit பிரித்தானியா வெளியேறும் திகதி மாற்றம்: ஐரோப்பிய ஒன்றியம் அறிவிப்பு

Report Print Arbin Arbin in பிரித்தானியா

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறும் திகதியை மே மாதம் 22 என ஐரோப்பிய ஒன்றிய கூட்டமைப்பு மாற்றியுள்ளது.

பிரதமர் தெரேசா மே முன்வைக்கும் பிரெக்சிற் ஒப்பந்தமானது பாராளுமன்ற உறுப்பினர்களால் ஒப்புக்கொள்ள மறுக்கப்படும் பட்சத்தில் இந்த திகதியானது ஏபரல் 12 ஆம் திகதிக்குள் மாற்றியமைக்கப்படும் எனவும் தெரியவந்துள்ளது.

எதிர்வரும் 29 ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறும் என ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டிருந்தது.

இதனிடையே தமது ஒப்பந்தமின்றி ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறாது என பிரதமர் தெரேசா மே பிடிவாதமாக இருந்து வந்தார்.

இந்த நிலையில் ஜூன் இறுதி வரை கால அவகாசம் வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியத்திடம் தெரேசா மே கோரிக்கை வைத்துள்ளார்.

ஆனால் இந்த விவகாரம் தொடர்பில் விவாதித்த ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 தலைவர்கள், தெரேசா மேவை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதாகவும்,

பல மணி நேரம் காத்திருக்க வைத்ததாகவும் பெல்ஜியத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

27 நாடுகளில் ஜேர்மனி, நெதர்லாந்து மற்றும் போலந்து நாடுகள் பிரித்தானியாவுக்கு ஆதரவான நிலை எடுத்தாக கூறப்படுகிறது.

ஆனால் பிரான்ஸ் இந்த விவகாரத்தில் கடும் போக்கை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. எதிர்வரும் மே 7 ஆம் திகதிக்குள் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற வேண்டும் என அழுத்தமாக வாதிட்டுள்ளது.

இதனிடையே மார்ச் 24 ஆம் திகதி கூடும் பிரித்தானிய பாராளுமன்றம், பிரெக்சிற் தொடர்பில் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து விவாதிக்க உள்ளது.

25 ஆம் திகதி பிரதமர் மே முன்வைக்கும் ஒப்பந்தம் தொடர்பில் மூன்றாவது முறையாக வாக்கெடுப்புக்கு வாய்ப்பு உருவாகலாம் என கூறப்படுகிறது.

ஆனால், தற்போதைய சூழலில் மார்ச் 29 ஆம் திகதி பிரெக்சிற் தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என தெரியவந்துள்ளது.

மேலும், பிரான்ஸ் முன்வைத்துள்ள மே 7 ஆம் திகதிக்குள் பிரித்தானியா எந்த முடிவுக்கும் எட்டவில்லை எனில், மே 9 ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியமானது மீண்டும் கூட்டத்தொடர் ஒன்றை மேற்கொள்ளும்.

மே மாதம் 23 முதல் 26 ஆம் திகதி வரை ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெற உள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...