லண்டன் தெருவில் தம்பதிகள் கண்முன்னே இளைஞருக்கு நேர்ந்த சம்பவம்: உயிருக்கு போராடிய கடைசி நேரம்

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா

லண்டனின் Isleworth நகரில் 17 வயது இளைஞர் இரண்டு நபர்களால் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Union Lane அருகில் உள்ள குடியிருப்பு தெருவில் உள்ளூர் நேரப்படி இரவு 10.35 மணியளவில் குறித்த இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். கத்தியால் குத்தப்பட்ட இளைஞர் ரத்த வெள்ளத்தில், பேச முடியாமல் உயிருக்கு போராடிக்கொண்டிருந்ததை அப்பகுதியில் இருந்த தம்பதியினர் பார்த்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தம்பதியினர் பொலிசாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, விரைந்து வந்த அவர்கள் அவசர ஊர்தி உதவியுடன் இளைஞரை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க முயலுகையில் சிறிது நேரத்திலேயே அவன் உயிரிழந்துவிட்டது தெரியவந்துள்ளது.

இதனை நேரில் பார்த்த தம்பதியினர் கூறியதாவது, ஒரு அலறல் சத்தம் கேட்டது, நாங்கள் வெளியே வந்து பார்க்கையில் முகமூடி அணிந்த இரண்டு நபர்கள், குறித்த இளைஞரை சரமாரியாக கத்தியால் குத்தினர்.

இதில், பலத்த காயமடைந்த இளைஞன் ரத்த வெள்ளத்தில் சரிந்தான். ஆனால், இருட்டாக இருந்த காரணத்தால் எங்களால் சரியாக கவனிக்க இயலவில்லை. அந்த இளைஞனின் வாயிலிருந்து ரத்தம் வெளியேறி, அவனை சுற்றி பரவி இருந்தது.

நாங்கள் ஓடிச்சென்று பார்க்கையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தான், இதனால் பொலிசில் தகவல் தெரிவித்தோம், ஆனால் துரதிர்ஷ்டவசமாக இறந்துவிட்டான் என தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை தேடி வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். 2019 ஆம் ஆண்டில் மட்டும் இதுவரை 28 கத்திகுத்து கொலைகள் லண்டனில் நடந்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers