பிரித்தானிய சிறைக்குள் கண்டுபிடிக்கப்பட்ட எலிகள்: அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானிய சிறைக்குள் இறந்த எலிகள் கிடப்பதைக் கண்டு அவற்றை அகற்ற முயன்றபோது அதில் ஏதோ தவறாக இருப்பதைக் கண்ட அதிகாரிகள், அவற்றை ஆய்வு செய்தபோது கண்டு பிடித்த விடயம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பிரித்தானியாவின் Dorset பகுதியில் அமைந்துள்ள சிறை வளாகத்திற்குள் மூன்று இறந்த எலிகள் கிடந்துள்ளன.

அவற்றை அகற்ற முயன்றபோது அவற்றின் வயிற்றில் தையல் போடப்பட்டிருப்பது தெரியவர, சந்தேகத்தின் பேரில் அந்த எலிகளை சோதித்த அதிகாரிகளுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

அந்த எலிகளின் வயிற்றுக்குள் ஐந்து மொபைல் போன்கள், சார்ஜர்கள், மூன்று சிம் காட்டுகள், சிகரெட் பேப்பர்கள் மற்றும் கஞ்சா உட்பட போதை மருந்துகளும் பிளாஸ்டிக் பேப்பரில் பொதிந்து பத்திரமாக வைக்கப்பட்டிருந்தன.

சிறைக்கு வெளியில் இருந்து சில குற்றவாளிகள் சிறைக்குள் இருக்கும் குற்றவாளிகளுக்காக அவற்றை போட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

சட்டவிரோதமாக சிறைக்குள் மொபைல் போன்கள் கடத்தப்படுவது குற்றச்செயல்கள் அதிகரிக்க வழிவகை செய்யும் என்பதால், சிறை அதிகாரிகள் அவற்றைக் கட்டுப்படுத்த ஒரு பக்கம் போராடிக்கொண்டிருக்கும் நிலையில், கடந்த 12 மாதங்களில் இங்கிலாந்திலும் வேல்சிலும் மட்டுமே 10,643 மொபைல் போன்கள் சிறைகளுக்குள் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்