பள்ளியில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே கழிவறை, கெமராவுடன்! பெற்றோர் ஆத்திரம்

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானியப் பள்ளி ஒன்றில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே கழிவறை ஒதுக்கப்பட்டுள்ளதோடு, கழிவறையில் CCTV கெமரா வேறு பொருத்தப்பட்டுள்ளது பெற்றோருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் Somersetஇல் அமைந்துள்ள பள்ளி ஒன்றில், மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் சேர்த்து ஒரே கழிவறை கட்டப்பட்டுள்ளது, அதாவது இருபாலரும் பயன்படுத்தும் கழிவறை.

அத்துடன் கழிவறை வளாகத்திற்குள் CCTV கெமராவும் பொருத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில் ஒரு மாணவன் கெமரா ஒன்றை உடைத்துவிட்டதாக பள்ளி நிர்வாகம் அவனது தந்தையிடம் புகார் செய்ய, அவரோ எனக்கு அதைப்பற்றியெல்லாம் கவலையில்லை, கழிவறைக்குள் கெமராக்கள் இருக்கக்கூடாது என்கிறார்.

மாணவிகளின் பெற்றோரோ கெமராக்கள் பெண்களின் பிரைவசியை பாதிக்கின்றன என குற்றம் சாட்டுகிறார்கள்.

ஆனால் இதற்கெல்லாம் மசியாத பள்ளி நிர்வாகமோ, கழிவறைக்குள் சண்டைகள் நடப்பதையும், மாணவர்கள் பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பதையும் தவிர்ப்பதற்காகவே கெமராக்கள் பொருத்தப்பட்டதாகவும் பல பள்ளிகளில் இந்த நடைமுறை பயன்பாட்டில் இருப்பதாகவும் கூறிவிட்டது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்