Brexitக்கு பிரித்தானிய மக்கள் கடும் எதிர்ப்பு: பேரணியில் திரண்ட ஒரு மில்லியன் மக்கள்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

நேற்று பிரெக்சிட்டை எதிர்த்து லண்டனில் ஒரு மில்லியன் பிரித்தானியர்கள் திரண்டதையடுத்து நகரமே குலுங்கியது.

பிரெக்சிட்டை ரத்து செய்யக்கோரி தயாரிக்கப்பட்டுள்ள மனு ஒன்றில் ஆன்லைனில் ஏராளமானோர் கையெழுத்திட்டு வருகின்றனர்.

ஐந்து மில்லியனுக்கும் அதிகமானோர் அந்த மனுவில் ஆன்லைனில் கையெழுத்திட்டதையடுத்து இணையதளம் கிராஷ் ஆனது.

பிரெக்சிட் தொடர்பில் மக்களின் இன்னொரு வாக்கெடுப்பு நடக்காது என்று கூறி, பிரெக்சிட்டை ரத்து செய்ய விரும்பும் மக்களின் வலிமையை நிரூபிக்க அழைப்பு விடுக்கும் அந்த மனுவை ஏற்கனவே பிரதமர் தெரஸா மே நிராகரித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

லண்டனில் நேற்று திரண்ட ஒரு மில்லியன் மக்கள், ஐரோப்பிய ஒன்றிய கொடிகளையும், அரசியல் செய்திகளைக் கொண்ட பதாகைகளையும் ஏந்தியவாறு Hyde Park Cornerஇலிருந்து Parliament Square வரை பேரணி ஒன்றை நடத்திக் காட்டியதில் நகரமே குலுங்கியது. 2003ஆம் ஆண்டு ஈராக் போருக்கு எதிராக மக்கள் திரண்டதற்கு பிறகு இதுதான் மிகப்பெரிய பேரணி என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers