லண்டனில் மசூதியை சுற்றிவளைத்த பொலிஸ்: வெளிவரும் அதிர்ச்சி தகவல்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

லண்டனில் உள்ள மசூதி ஒன்றில் கொலை சம்பவத்தில் தொடர்புடைய நபர் ஒருவர் புகுந்ததாக கூறி பொலிசார் சுற்றிவளைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லண்டனின் கன்னிங்காம் பகுதி அருகே 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் கத்தியால் தாக்கப்பட்டு குற்றுயிராக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் தொடர்புடைய நபர், சம்பவம் நடந்த பகுதிக்கு அருகாமையில் உள்ள மசூதி ஒன்றில் புகுந்துள்ளதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து குறித்த மசூதியை ஆயுதம் தாங்கிய பொலிசார் சுற்றிவளைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இளைஞர் தாக்கப்பட்ட தகவல் தெரியவந்ததும் சம்பவப்பகுதிக்கு விரைந்த மருத்துவ உதவிக்குழுக்கள் மற்றும் ஆம்புலன்ஸ் சேவை குறித்த இளைஞரை மீட்டு மருத்துவமனை சேர்ப்பித்துள்ளனர்.

தொடர்புடைய நபர்களை பொலிசார் தேடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்