பிரித்தானிய இளம்பெண்களை ஏமாற்றி ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு மணப்பெண்களாக்கிய பெண் சிக்கினார்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானிய இளம்பெண்களை ஏமாற்றி, ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு மணப்பெண்களாக்குவதில் முக்கியப்பங்கு வகித்தவரான ஒரு பிரித்தானிய இளம்பெண் சிரிய முகாம் ஒன்றில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எப்போதும் கையில் துப்பாக்கியுடன் காணப்படுபவரும், ஐ.எஸ் ஜோடி சேர்ப்பவர் என அழைக்கப்படுபவருமான Tooba Gondal (25) என்பவர்தான் அந்த பெண்.

Umm Muthanna Al Britaniyah என்ற போலிப்பெயருடன் உலா வந்த Tooba, தனது இரண்டு குழந்தைகளுடன் சிரியாவிலிருந்து தப்பிக்க முயலும்போது குர்திஷ் படையினரிடம் சிக்கி தற்போது சிரியாவிலுள்ள Ain Issa முகாமில் வைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

தற்போது பிரித்தானியாவுக்கு திரும்ப விரும்புவதாக Tooba தெரிவித்துள்ளார். இந்த முகாமிலேயே வாழ்க்கை முழுவதும் இருக்க முடியாது, எங்களால் சமுதாயத்திற்கு எந்த ஆபத்தும் வராது என்று கூறும் Tooba, மீண்டும் சாதாரணமாக வாழத்தானே விரும்புகிறோம் என்கிறார்.

இணையத்தில் ஐ.எஸ் அமைப்பின் கொடூரக்கொலைகளை புகழ்ந்து எழுதி வந்த Toobaவின் எழுத்துக்களால், இளம் பிரித்தானிய இஸ்லாமிய பெண்கள் சிரியாவுக்கு சென்று ஜிகாதி மணப்பெண்களாக ஆக ஈர்க்கப்பட்டார்கள்.

இணையத்தில் ஏராளமான இளம்பெண்களால் பின் தொடரப்பட்ட Tooba, அவர்கள் மீது வலிமையான தாக்கம் ஏற்படுத்தியிருந்தார்.

பிரித்தானியா ஒரு அசுத்தமான நாடு என்று கூறியிருந்த Tooba, 2015 பாரீஸ் தாக்குதலை மிகவும் புகழ்ந்து எழுதியிருந்தார்.

ஐ.எஸ் அமைப்பில் சேருவதற்கு முன் கிழக்கு லண்டனில் வாழ்ந்து வந்த Tooba, புகழ்பெற்ற லண்டன் வர்த்தகர் ஒருவரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்