புதிய இன்ஸ்டாகிராம் கணக்கு துவங்கிய ஹரி - மெர்க்கல்: மில்லியன் கணக்கில் குவிந்த ரசிகர்கள்!

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானிய இளவரசர் ஹரி - மெர்க்கல் தம்பதியினர் இருவரும் ரசிகர்களுடன் நேரடி தொடர்பில் இருப்பதற்காக புதிய இன்ஸ்டாகிராம் கணக்கினை துவக்கியுள்ளனர்.

இளவரசர் ஹரி (34) மற்றும் மேகன் (37) ஆகியோர் தங்களுடைய அன்றாட நடவடிக்கைகளை இதற்கு முன்பு கென்சிங்டன் அரண்மனை கணக்கு மற்றும் கேம்பிரிட்ஜ் டூக் மற்றும் டச்சஸ் கணக்கில் பகிர்ந்து கொண்டனர்.

ஆனால் சமீபத்தில் தன்னுடைய சகோதரின் குடும்பத்தை விட்டு தனியாக பிறந்து செல்லவிருக்கும் நிலையில், புதியதாக ஒரு இன்ஸ்டாகிராம் கணக்கினை துவக்கியுள்ளனர்.

கணக்கு துவங்கப்பட்ட முதல் 30 நிமிடங்களில் 150,000 பேர் பின் தொடர ஆரம்பித்தனர். அதன் எண்ணிக்கை அதிகரித்து தற்போது 1 மில்லியனை தாண்டி சென்றுவிட்டது.

இதுவரை கண்டிராத பல புதிய புகைப்படங்களை தம்பதியினர் எந்த கணக்கில் வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படங்களானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers