அன்னையர் தினத்தில் தாயை இழந்த பிரித்தானிய சிறுமிக்கு அரச குடும்பத்தில் இருந்து வந்த கடிதம்!

Report Print Vijay Amburore in பிரித்தானியா

தாயை இழந்த 4 வயது பிரித்தானிய சிறுமிக்கு அரச குடும்பத்திலிருந்து வந்திருக்கும் கடிதம் ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

பிரித்தானியாவை சேர்ந்த எல்லா லெனான் என்கிற 4 வயது சிறுமி, அன்னையர் தினத்தன்று புற்றுநோயால் இறந்த தன்னுடைய தாய்க்கு ஒரு கடிதம் எழுதி, 'பரலோகத்தில் என்னுடைய தாய்' என்கிற முகவரியிட்டு தபால் பெட்டியில் போட்டுள்ளார்.

அதனை படமாக பிடித்து சிறுமியின் அத்தை லிண்டா ரோஸ் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலானதை அடுத்து, ஆச்சர்யமளிக்கும் விதமாக அரண்மனையில் இருந்து ஒரு கடிதம் வந்திருக்கிறது.

அந்த கடிதத்தை பார்த்தவுடன் சிறுமி மிகவும் மகிழ்ச்சியடைந்ததாக குறிப்பிட்டிருக்கும் அவர், அந்த கடிதத்தையும் சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், சிறுமி மிகப்பெரிய புன்னகையுடன் தோற்றமளிக்கிறாள். இந்த உலகத்தில் அற்புதமான மக்களும் இருக்கிறார்கள் என்பதை காட்டுகிறது. எத்துணை நன்றி கூறினாலும் ஈடாகாது எனக்கூறி பதிவிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தை பார்த்த பொதுமக்கள் பலரும், அரண்மனையில் இருந்து அந்த கடிதத்தை எழுதிய நபரை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers