ஹரி - மேகன் குடியேறிய மறுநாளே புதிய வீட்டின் மேல் மர்மமாக பறந்த ட்ரோன்!

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானிய ஐலவரசர் தன்னுடைய மனைவி மேகனுடன் குடியேறியிருக்கும் புதிய வீட்டின் மேல் பகுதியில் ட்ரோன் ஒன்று பறக்கவிடப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

£ 3 மில்லியன் செலவில் பல மாதங்கள் புதுப்பித்தல் பணி நடைபெற்று வந்த நிலையில், இளவரசர் ஹரி தன்னுடைய மனைவி மேகனுடன் கடந்த வெள்ளிக்கிழமையன்று frogmore குடிசையில் குடியேறினார்.

இந்த நிலையில் நேற்று மாலை 5 மணியளவில் ட்ரோன் ஒன்று மர்மமான முறையில் வீட்டின் மேல் பகுதியில் பறந்துள்ளது.

இதுதொடர்பாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், ஒரு பொறுப்பற்ற டிரோன் பைலட் வான்வழியின் மூலம் புகைப்படங்களை எடுக்க முயற்சித்திருப்பது தெரியவந்துள்ளது.

இதனை நேரில் பார்த்த ஒருவர் கூறுகையில், அந்த ட்ரோன் வடக்கு நோக்கி நீண்ட நேரம் பறந்துகொண்டிருந்தது. கடந்த ஆண்டு ஹரி - மேகன் அவர்களுடைய திருமணநாளில் சாரட்டு வண்டியில் சென்ற பகுதியின் வழியே பறந்தது.

அதன்பிறகு அங்கிருந்து திரும்பி இளவரசரின் புதிய வீட்டின் மீது பறந்தது. பின்னர் தெற்கு நோக்கி புறப்பட்ட இடத்திற்கு சென்று மறைந்துவிட்டது என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பொலிஸார் கூறுகையில், இந்த ட்ரோன் விமான நிலையத்திலிருந்து ஐந்து மைல்கள் தொலைவில் பறந்துள்ளது. ராணியின் பாதுகாப்பிற்காக இப்பகுதியில் விமானம் மற்றும் ட்ரோன்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வின்ட்சர் கிரேட் பார்க் எல்லைக்குள் உள்ள மண்டலங்களில் ட்ரோனை பறக்க விடுவது சட்டவிரோதமானது.

இரண்டு நிமிடத்திற்கு ஒரு முறை பயணிகள் விமானம் செல்லும் பாதையிலும் இந்த ட்ரோன் பறக்கவிடப்பட்டுள்ளது.

ஒரு விமான கண்காணிப்பு வலைத்தளத்தின் படி, பயணிகள் விமானங்கள் 1,300 அடி முதல் 1,400 அடிக்கு இடையே பறந்து செல்லும். ஹீத்ரோவிலுள்ள ஒரு ஆதாரத்தின்படி, அவர்கள் சுமார் 2,000 முதல் 2,500 அடி வரை பறக்கவிடுவதாக கூறியுள்ளனர்.

இந்த ட்ரோன் 980மீட்டர் உயரத்தில் பறக்கவிடப்பட்டிருக்கிறது. பிரித்தானியாவில் ட்ரோன்கள் 300 மீட்டர் உயரத்தில் மட்டுமே பறக்கவிடப்பட வேண்டும் என சட்டம் கூறுகிறது என தெரிவித்துள்ளனர்.

மேலும் விதிமுறைகளை மீறி பரந்த ட்ரோன் குறித்து தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்