இந்திய வம்சாவளி கர்ப்பிணிப் பெண்ணை கொன்ற நபர் குறித்த சமீபத்திய தகவல்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

இந்திய வம்சாவளிப் பெண்ணை கொலை செய்த அவரது முன்னாள் கணவர், கொலை செய்வதற்காக ஓராண்டு கடுமையான திட்டம் தீட்டியதாக நேற்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்திய வம்சாவளியினரான தேவிக்கு 16 வயதிருக்கும்போது அவரது பெற்றோர் மொரீஷியசைச் சேர்ந்த Ramanodge Unmathallegadoo என்பவருக்கு திருமணம் செய்து வைத்தனர்.

ஆனால் அந்த திருமண வாழ்வு நீண்ட காலம் நிலைக்கவில்லை. 2012ஆம் ஆண்டு இருவருக்கும் ஏற்பட்ட சண்டையின்போது, தேவி லண்டனிலிருக்கும் தனது வீட்டின் முதல் மாடியிலிருந்த படுகையறையிலிருந்து ஜன்னல் வழியாக குதித்தார்.

அதில் அவரது கணுக்கால் உடைய, பொலிசார் அவரது கணவர் Ramanodgeயைக் கைது செய்தனர்.

தேவி தனது கணவனைப் பிரிய, அந்த பிரிவைத் தாக்கிக் கொள்ள இயலாத Ramanodge மன அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதோடு, வேலையையும் ராஜினாமா செய்ததாக நேற்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

மனைவியின் பிரிவைத் தாங்க இயலாத Ramanodge அவர் மீது வெறுப்புற்று அவரை பழி வாங்குவதற்காக ஓராண்டு திட்டம் தீட்டியிருக்கிறார்.

தேவி இஸ்லாமிய மதத்திற்கு மாறி தனது பெயரையும் சனா முகமது என்று மாற்றி இம்தியாஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

தேவி, அவரது கணவர் இம்தியாஸ் மற்றும் தேவியின் வயிற்றிலிருக்கும் குழந்தை ஆகிய மூவரையும் கொல்லத் திட்டமிட்ட Ramanodge, மூன்று முறை பல்வேறு ஆயுதங்களை வாங்கி அவர்களது வீட்டுக்கு அருகேயே மறைத்து வைத்திருக்கிறார்.

கடைசியாக ஒரு நாள் இரண்டு வில் அம்புகளுடன் தேவியின் வீட்டின் பின்புறமுள்ள ஷெட்டில் பதுங்கியிருந்த Ramanodge, வில் அம்பினால் தாக்க, எட்டு மாத கர்ப்பிணியான தேவியின் மீது அம்பு பாய்ந்திருக்கிறது.

உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவருக்கு அறுவை சிகிச்சை செய்து குழந்தை அகற்றப்பட, தேவியின் உயிர் பிரிந்திருக்கிறது.

சம்பவ இடத்திலேயே கையும் களவுமாக பிடிபட்டும் இதுவரை Ramanodge தனது குற்றத்தை ஒப்புக்கொள்ளாத நிலையில், இன்னும் விசாரணை தொடர்கிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்