லண்டனில் கொலை செய்யப்பட்ட இந்திய பெண்: அம்பலமான கணவரின் ரகசியங்கள்

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா

லண்டனில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட பெண் கொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணையில் சில அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்துள்ளன.

Wolverhampton நகரில் வசித்து வந்த Sarbjit Kaur(42) என்ற பெண்மணி தனது வீட்டில் மர்மாக இறந்துகிடந்தார். வீட்டிற்கு கொள்ளையடிக்க வந்த நபர்கள், தனது மனைவியை தாக்கியுள்ளதாகவும் இதனால் தனது மனைவி இறந்துவிட்டதாகவும் Sarbjit Kaur - இன் கணவர் Gurpreet Singh பொலிசில் தெரிவித்திருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் பொலிசார் விசாரணை நடத்தி வந்ததில், Sarbjit கொலை செய்யப்பட்டிருப்பதாகவும், தனியாக வசித்து வந்த அவரை கடைசியாக கணவர் Gurpreet Singh சந்தித்துள்ளார் என தெரியவந்தது.

மேலும், இது ஒரு திட்டமிட்ட படுகொலை என விசாரணையில் தெரியவந்ததையடுத்து இன்னும் 6 வாரங்களுக்குள் இந்த விசாரணை முடிந்து Gurpreet க்கு தண்டனை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

concrete நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் Gurpreet Singh - இன் இரண்டாவது மனைவி Sarbjit என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த கொலை சம்பவம் நடந்து 3 மாதங்கள் கழித்து, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் Gurpreet கைது செய்யப்பட்டு அவர் மீது கொலைவழக்குப்பதிவாகி Birmingham நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில், தனது மனைவியை கொலை செய்வதற்கு £20k பவுண்ட்டு கொடுத்து கொலையாளியை Gurpreet ஏற்பாடு செய்துள்ளார் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

இந்தியாவில் இருக்கும் கல்லூரி மாணவி ஒருவரை மூன்றாவதாக திருமணம் செய்துகொள்வதற்கு இடையூறாக இருந்த இரண்டாவது மனைவியை கொலை செய்ய திட்டமிட்டிருந்தார்.

அதன்படி கொலையாளிக்கு £20k பவுண்ட் கொடுத்து தனது மனைவியை கொலை செய்ய அனுப்பி வைத்துள்ளார். மேலும் கொள்ளையடிப்பதற்காக இந்த கொலையை நடந்தது எனவும் பொலிசார் கவனத்தை திசை திருப்பியுள்ளார் என முக்கிய சாட்சி ஒருவர் நீதிமன்றத்தி வாக்குமூலம் அளித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்