வெளிநாட்டில் கொடுக்கப்படும் கடுமையான தண்டனைகள்-சட்டங்கள் என்னென்ன தெரியுமா? கண்டிப்பாக தெரிஞ்சுகோங்க

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவின் தலைநகர் லண்டனைச் சேர்ந்த லாலெ ஷ்ரவேஷ் என்ற 55 வயது பெண் தனது கணவரின் இறுதிச்சடங்கிற்காக துபாய் சென்றிருந்தார்.

அப்போது அவர் துபாய் விமானநிலையத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்டார். காரணமே புரியாமல் கைது செய்யப்பட்டதால், லாலெ ஷ்ரவேஷ் ஒன்றும் தெரியாமல் இருந்தார்.

அதன் பின் 2016-ஆம் ஆண்டு தனது கணவர் மறுமணம் புரிந்த புகைப்படங்களை பேஸ்புக்கில் பதிவிட்ட போது, ஷ்ரவேஷ் பகிர்ந்த கருத்துக்களுக்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது தெரியவந்தது.

லாலெ ஷ்ரவேஷ்க்கும் அவரது கணவருக்கும் திருமணமாகி 18 வருடங்கள் ஆனது. அந்த சமயத்தில் ஒரு எட்டு மாத காலம் ஐக்கிய அரபு எமிரேட்டில் இருந்தார் ஷ்ரவேஷ். பின் அவருக்கு விவாகரத்து ஆனதும் அவர் பிரித்தானியாவிற்கு திரும்பிவிட்டார்.

இதனையடுத்து, தனது கணவர் மறுமணம் செய்துகொண்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்த ஷ்ரவேஷ், நீ மண்ணில் புதைந்து போக வேண்டும். இந்த குதிரைக்காகதான் என்னை விட்டுவிட்டாயா என்று பதிவிட்டிருந்தார்.

ஐக்கிய நாடு எமிரேட்டின் சைபர் குற்றவியல் சட்டப்படி சமூக வலைதளங்களில் மரியாதைக் குறைவான கருத்துக்களை பதிவிட்டால் ஜெயில் தண்டனையோ அல்லது அபராதமோ வழங்கப்படும்.

இதனால் வெளிநாட்டிற்கு செல்லும் போது சுற்றுலாப்பயணிகள் அங்கிருக்கும் சட்டங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்று சில நாட்டு சட்டங்களை குறிப்பிட்டுள்ளது.

ஐஸ்லாந்து

இந்த நாட்டில் Strip கிளப் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் இதற்காக மக்கள் அங்கு செல்ல வேண்டாம்.

பாகிஸ்தான் மற்றும் சவுதி அரேபியா

இந்த இரண்டு நாடுகளிலும் காதலர் தினம் கொண்டாடப்படுவது தடை செய்யப்பட்டுள்ளதாம், காதலர் தினத்தன்று ரோஜாவோ, சாக்லெட் அல்லது கார்டுகள் ஏதேனும் கொடுத்தால் அவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்கப்படுமாம்.

தாய்லாந்து

தாய்லாந்தில் நாட்டில் இருக்கும் பணங்களை மிதிக்க கூடாது, ஏனெனில் அந்த பணங்களில் அரசரின் முகம் இருக்கும் அப்படி அவர்கள் மிதித்தால் அது சட்டப்படி குற்றம் ஆகும்.

கனடா

கனடாவில் Baby walkers(குழந்தைகள் வைத்து செல்ல பயன்படுவது) தடை செய்யப்பட்டுள்ளது. ஏனெனில் குழந்தைகளை இதில் வைத்துக் கொண்டு சாதரணமாக பெற்றோர் செல்வதால், குழந்தைகள் விபத்தில் சிக்கிக் கொள்கின்றனர்.

அதன் காரணமாகவே இது தடை செய்யப்பட்டுள்ளது, அதையும் மீறி பயன்படுத்தினால் $100,000 அபராதம் செலுத்த நேரிடும்.

பார்சிலோனா

பார்சிலோனாவில் கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் பீச்சில் மட்டுமே நீச்சல் உடை பயன்படுத்த வேண்டும், அதைத் தவிர வேறு எங்காவது அது போன்று உடை அணிந்து சிக்கினால் 100 பவுண்ட் அபராதம்.

போர்ச்சுகல்

போர்ச்சுக்கல் நாட்டில் கடலில் சிறு நீர்கழிக்கக் கூடாது என்ற சட்டம் உள்ளது.

தாய்லாந்து மற்றும் சிங்கப்பூர்

இந்த இரண்டு நாடுகளிலும் சாப்பிடும் ஸ்விங்கங்களை கண்ட இடத்தில் வீசக் கூடாது, அப்படி வீசினால் அந்நாட்டு சட்டப்படி இது குற்றம், 400 டொலர் அபராதம் விதிக்கப்படும்.

பிரான்ஸ்

பிரான்சில் நீச்சல் குளத்தில் கட்டாயமாக உள்ளாடை மட்டுமே பயன்படுத்த வேண்டுமாம், இதற்கு அங்கு கடுமையான தண்டனைகள் கொடுக்கப்படவில்லை என்றாலும் பெரும்பாலானோர் இதன் படியே தான் நீச்சல் குளத்தில் குளிப்பார்கள் என்று கூறப்படுகிறது.

ரஷ்யா மற்றும் கஜகஸ்தான்

ரஷ்யா மற்றும் கஜகஸ்தான் நாடுகளில் பயன்படுத்தப்படும் உடைகளில் 6 சதவீதம் காட்டன் இருக்க வேண்டுமாம், உள்ளாடைக்கும் இந்த சட்டம் பொருந்தும் என்று கூறப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்