குழந்தையின் பிறப்பை பொதுமக்களுக்கு அறிவிக்க மாட்டோம்: அரண்மனை வெளியிட்ட தகவல்!

Report Print Vijay Amburore in பிரித்தானியா

ராயல் ஜோடியினர் தங்களுடைய குடும்பத்துடன் சேர்ந்து கொண்டாடும் வரை, குழந்தை பிறப்பு பற்றிய தகவலை வெளியிட மாட்டோம் என தெரிவித்துள்ளனர்.

பிரித்தானிய இளவரசர் ஹரி தன்னுடைய மனைவி மேகனுடன் ஃபிரோமோர் குடிசையில் வசித்து வருகிறார்.

நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் மேகனுக்கு இன்னும் சில வாரங்களில் குழந்தை பிறக்கலாம் என கூறப்படுகிறது.

மேலும் இளவரசி மேகன், வில்லியம் - கேட் தம்பதியினர் போன்று மருத்துவமனையில் குழந்தை பெற்றுக்கொள்ளாமல், வீட்டிலேயே குழந்தை பெற்றுக்கொள்ள முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது.

ராணி மற்றும் அவருடைய அரச குடும்ப மூதாதையர்கள் பலரும் கென்சிங்டன் அரண்மனை மற்றும் கிளாரன்ஸ் ஹவுஸில் தான் குழந்தை பெற்றுள்ளார். அவர்களுடைய அடிச்சுவடுகளை மேகனும் பின்பற்ற உள்ளார்.

ஆனால் இதற்கு ராணி ஒப்புக்கொள்வாரா என்பது சந்தேகமாகவே உள்ளது.

இந்த நிலையில் ஹரி, மேகனுக்கு பிறக்கும் குழந்தை பற்றிய அறிவிப்பினை, குடும்பத்துடன் சேர்ந்து கொண்டாடும் வரை வெளியில் பொதுமக்களுக்கு அறிவிக்க மாட்டோம் என அரண்மனை நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்