நிகழ்ச்சியின் போது மேடையிலே உயிரைவிட்ட பிரித்தானிய பிரபலம்!

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானிய ஸ்டாண்ட்-அப் நகைச்சுவையாளர் நிகழ்ச்சியின் போதே மேடையில் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆங்கிலேய நகரமான பிசெஸ்டரில் உள்ள மதுபான விடுதி ஒன்றில், பிரித்தானிய ஸ்டாண்ட்-அப் நகைச்சுவையாளரான Ian Cognito (60) நிகழ்ச்சி செய்துகொண்டிருந்துள்ளார்.

5 நிமிட நிகழ்ச்சியில் திடீரென அப்படியே மயங்கி அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்துள்ளார். பின்னர் தடுமாறி கீழே விழுந்த அவருக்கு வலிப்புடம், மூச்சிரைப்பு ஏற்பட்டுள்ளது.

இதனை பார்த்த பொதுமக்கள் அனைவரும் இதுவும் நிகழ்ச்சியின் ஒரு பகுதி என நினைத்துக்கொண்டு ரசித்துள்ளனர்.

அதேசமயம் அவருடைய நடவடிக்கைகளும் அசாதாரணமாக தெரியவில்லை. அப்பொழுது துடிதுடித்த அவர், மாரடைப்பு ஏற்பட்டிருப்பதாக பேசியுள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஒருங்கிணைப்பாளர் உடனடியாக ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் முதலுதவி கொடுக்க ஆரம்பித்தனர். ஆனால் துரதிஷ்டவசமாக அவர் மேடையிலேயே உயிரிழந்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்