இலங்கையை சேர்ந்த 4 பேர் லண்டன் விமான நிலையத்தில் கைது!

Report Print Vijay Amburore in பிரித்தானியா

சர்வதேச விமானத்தில் லுடோன் விமான நிலையம் வந்தடைந்த 4 இலங்கையர்களை லண்டன் பொலிஸார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச விமானத்தின் மூலம் ஏப்ரல் 10 ம் திகதி லுடோன் விமான நிலையத்திற்கு நான்கு இலங்கையர்கள் வந்து சேர்ந்தனர்.

பயங்கரவாதச் சட்டத்திற்கு எதிரான ஒரு தடைசெய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்ற சந்தேகத்தின் பேரில் அவர்களை கைது செய்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விமான நிலைய பொலிஸாரால் கைது செய்யப்பட்ட அவர்கள் தற்போது, பயங்கரவாத எதிர்ப்பு ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் அனைவரும் பெட்ஃபோர்ட்ஷையர் பொலிஸ் நிலையத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள்.

ஸ்காட்லாந்து யார்ட் தற்போது விசாரணை நடந்து வருகிறது என்பதை உறுதி செய்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers