கழிவறையால் கர்ப்பிணி பெண்ணுக்கு ஏற்பட்ட பிரச்சனை... புகைப்படங்களுடன் அவரே அளித்த விளக்கம்

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் கர்ப்பிணி பெண் இரண்டு வாரங்களாக தனது கழிவறையில் ஏற்பட்டுள்ள பிரச்சனையால் பரிதவித்து வருகிறார்.

Birmingham-ல் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சோபி ஜான்ஸ்டோன் (20). இவருக்கு நான்கு குழந்தைகள் உள்ள நிலையில் அவர் மீண்டும் கர்ப்பமாக உள்ளார்.

சோபி வீட்டு கழிவறையில் இரண்டு வாரங்களாக தண்ணீர் வழிந்து வெளியில் வந்து கொட்டுகிறது.

அதாவது அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் யார் தங்கள் வீட்டு கழிவறையை உபயோகிப்படுத்தினாலும், சோபி வீட்டு கழிவறையில் இருந்து தண்ணீர் வழிந்து வெளியில் வருகிறது.

இதனால் அடிக்கடி கழிப்பறையில் இருந்து வெளியேறும் தண்ணீரை சுத்தம் செய்து கொண்டு திணறி வருகிறார் சோபி.

இது குறித்து சோபி கூறுகையில், நான்கு குழந்தைகளை வைத்து கொண்டு இரண்டு வாரங்களாக திணறி வருகிறேன்.

இது தொடர்பாக அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தேன், அவர்கள் வீட்டுக்கு வந்து portable கழிவறையை தற்காலிகமாக உபயோகப்படுத்த சொன்னார்கள்.

portable கழிவறையை கொண்டு நான்கு குழந்தைகளை சமாளிப்பது என்பது முடியாத காரியம்.

அடிக்கடி கழிவறையில் இருந்து தண்ணீர் வெளியேறுவதால் என்னால் வெளியில் கூட செல்லமுடியவில்லை, இதனால் மருத்துவ பரிசோதனையை தவற விட்டு விட்டேன்.

என் குழந்தைகளும் வெளியில் செல்ல முடியவில்லை.

இந்த கழிவறை பிரச்சனையை சரி செய்து தருகிறோம் என கூறிவிட்டு பின்னர் ஆட்கள் யாரும் வரவில்லை என கூறியுள்ளார்.

இது தொடர்பாக கவுன்சில் அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில், இந்த பிரச்சனையை சரிசெய்துவிடுமோம், இனி அடைப்பு ஏற்படாத வகையில் பணி நடக்கும், நேற்று இதற்கான வேலையை தொடங்கியுள்ளோம்.

சாதாரண உயர் அழுத்தத்தின் மூலம் கழிவறை வடிகால் பிரச்சனையை சரி செய்யமுடியவில்லை.

இன்னும் அதிகமான உயர் அழுத்தத்தின் மூலம் சரி செய்யவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers