அவமதித்த முதலாளிகள், பழி வாங்க பணத்தை திருடி பாலியல் தொழிலாளிகளுடன் செலவிட்ட ஊழியர்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

தன்னை அவமதித்த முதலாளிகளை பழி வாங்குவதற்காக அலுவலகத்திலிருந்து ஏராளமான பணத்தை கொள்ளையடித்த ஊழியர் ஒரே வாரத்தில் அந்த பணம் முழுவதையும் போதைப் பொருட்களுக்கும் பாலியல் தொழிலாளிகளுடன் செலவிடுவதற்கும் பயன்படுத்தியுள்ளார்.

பிரித்தானியாவின் Kentஐச் சேர்ந்த, அலுவலகம் ஒன்றில் கணக்கராக பணியாற்றிய Darren Carvill (38), தன்னை எப்போதும் அவமதித்த தனது முதலாளிகளை பழி வாங்குவதற்காக நிறுவனத்திலிருந்து 260,000 பவுண்டுகளை கொள்ளையடித்தார்.

அதில் 170,000 பவுண்டுகளை ஒரே வாரத்தில் போதைப்பொருட்கள் வாங்கவும் பாலியல் தொழிலாளிகளுடன் உல்லாசமாக இருப்பதற்காகவும் செலவிட்டார் Darren.

தன் மீதான 18 குற்றச்சாட்டுகளையும் ஒப்புக் கொண்டுள்ள Darrenக்கு இரண்டரையாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தான் எப்போதும் தனது அலுவலகத்தில் அவமதிக்கப்பட்டதாகவும், வம்புக்கிழுக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ள Darren, அதனால் தனக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டதாவும், அதனால் சமுதாயத்தில் உயர் நிலையிலிருக்கும் பாலியல் தொழிலாளிகளுடன் பார்ட்டிகளுக்கு சென்று போதைப்பொருள் பயன்படுத்தும் பழக்கத்துக்கு அடிமையானதாகவும் தெரிவித்துள்ளார்.

தற்போது Darren செலவிட்ட பணத்தை திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைகளில் அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.


மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers