துணி மாட்டும் கொக்கியை வைத்து கருக்கலைப்பு: 12 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்!

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானியாவில் 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, துணி மாட்டும் கொக்கியை வைத்து அவருடைய தாத்தா கருக்கலைப்பு செய்துள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

பிரித்தானியாவை சேர்ந்த சார்லோட் வேட் என்கிற 22 வயது இளம்பெண் தன்னுடைய 12 வயதில் நடந்த ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் குறித்து பேசியுள்ளார்.

சார்லோட்டின் வீடு இருக்கும் இடத்திலிருந்து அவருடைய தாத்தா ரேமண்ட் ஹோட்ஜஸ் (73) 200 மைல்கள் தூரத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்துள்ளார்.

வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே அவர் வீட்டிற்கு வருகை தந்திருக்கிறார். அந்த சமயங்களில் எல்லாம் சார்லோட் மற்றும் அவருடைய சகோதரனை, ரேமண்ட் பொறுப்பில் ஒப்படைத்துவிட்டு அவருடைய பெற்றோர் வேலைக்கு கிளம்பிவிடுவார்கள்.

இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட ரேமண்ட் சிறுமியிடம் 6 வயதில் இருந்தே அத்துமீற ஆரம்பித்துள்ளார். இதை பற்றி வெளியில் கூறினால், உன்னுடைய சகோதரனை கொலை செய்துவிடுவேன் என மிரட்டியுள்ளார்.

இதற்கு பயந்து அந்த சிறுமியும் வெளியில் கூறாமல் இருந்துள்ளார். வாரத்திற்கு ஒரு முறை வீட்டிற்கு வந்து சென்ற ரேமண்ட் அடுத்த சில வருடங்களில் அடிக்கடி வீட்டிற்கு வர ஆரம்பித்துள்ளார்.

பின் வரும் நாட்களில் சிறுமியிடம் அத்துமீறுவதை வீடியோவாக படம்பிடித்துக் கொண்டு மிரட்டியுள்ளார். 12 வயதில் சிறுமிக்கு இரண்டு மாதமாக மாதவிடாய் ஏற்படாமல் இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த சிறுமி மருத்துவமனைக்கு செல்லலாம் என முடிவெடுத்துள்ளார்.

ஆனால் அதற்குள் ரேமண்ட், துணி மாட்டும் தாங்கியை கொண்டு சார்லோட்டிற்கு கருக்கலைப்பு செய்துள்ளார். இதில் வலி தாங்க முடியாமல் தான் இறந்துவிடுவேனோ என அஞ்சியதாகவே அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் அதன்பிறகும் கூட ரேமண்ட் சிறுமியிடம் அத்துமீறுவதை விடுவதாய் இல்லை.

இதனால் பெரும் வேதனையில் இருந்த சிறுமிக்கு 2016ம் ஆண்டு ஒரு புதிய உத்வேகம் கிடைத்துள்ளது. நேரடியாக பொலிஸ் நிலையம் சென்று தனக்கு நடந்தவை குறித்து புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்ட பொலிஸார், ரேமண்ட்டை கைது செய்தனர்.

2017ம் ஆண்டு நடந்த வழக்கு விசாரணையின் போது குற்றவாளிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers