ஒரே நொடியில் 450,000 பவுண்டுகளை இழந்த பிரித்தானிய தாயார்... ஏமாற்றியதாக புகார்: பொலிசார் கைவிரிப்பு

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானிய தாயார் ஒருவர் நாணய பரிமாற்ற நிறுவனம் ஒன்றில் சுமார் 450,000 பவுண்டுகளுக்கு மேலாக மொத்தமாக தொலைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த விவகாரம் தொடர்பில் பொலிசாரை நாடிய அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியதாக கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவின் டோவர் பகுதியில் குடியிருந்து வருபவர் பவுலின் க்ரேஸே. இவர் போர்த்துக்கல் நாட்டில் உள்ள தமது 5 படுக்கை அறை கொண்ட குடியிருப்பு ஒன்றை விற்பனை செய்த சுமார் £462,113 தொகையை தனியார் நாணய பரிமாற்ற நிறுவனம் மூலம் பிரித்தானியாவுக்கு அனுப்ப ஏற்பாடு செய்துள்ளார்.

ஆனால் அந்த பரிமாற்றம் நடைபெறவில்லை என்பது மட்டுமின்றி, அடுத்த 2 வாரங்களில் அந்த நிறுவனம் திவாலானது எனவும் தெரியவந்துள்ளது.

பவுலின் மட்டுமல்ல, மேலும் 250 பேர் குறித்த நிறுவனத்தில் பெருந்தொகையை இழந்துள்ளதாக தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பவுலின் விவகாரத்தில் விசாரணை மேற்கொண்டுப் வந்த லண்டன் பொலிசார், தற்போது போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி, வழக்கை ரத்து செய்வதாக தெரிவித்துள்ளனர்.

Premier FX நாணய பரிமாற்ற நிறுவனத்தால் தமது வாழ்க்கை, தொழில் மற்றும் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறியுள்ளதாக பவுலின் தெரிவித்துள்ளார்.

தற்போது வாடகை குடியிருப்பு ஒன்றில் வசித்துவரும் பவுலின், தமது வாழ்க்கை ஒரு நொடியில் தலைகீழாக மாறிவிட்டது எனவும், மொத்தமாக புரட்டிப்போட்டுள்ளதாகவும், எந்த திசை நோக்கி இனி பயணிக்க வேண்டும் என தெரியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers