சரியாக வந்த மாதவிடாய்... கர்ப்பத்துக்கான எந்த அறிகுறியும் இல்லை.... ஆனால் திடீரென குழந்தை பெற்ற லண்டன் பெண்

Report Print Raju Raju in பிரித்தானியா

லண்டனை சேர்ந்த இளம்பெண் தான் கர்ப்பமாக இருப்பது தெரியாமலேயே இருந்த நிலையில் அவருக்கு குளியல் தொட்டியில் ஆரோக்கியமான குழந்தை பிறந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கு லண்டனை சேர்ந்தவர் சார்லேட் டுபார்ட் (24). இவர் தனது கணவர் மிகுல் ஏஞ்சல் (28) உடன் வசித்து வந்தார்.

சார்லேடுக்கு கடந்த ஜனவரி மாதம் இறுதியில் திடீரென எடை கூடியது.

ஏன் இப்படி திடீரென எடை கூடியது என அவர் குழம்பி வந்த நிலையில் ஜனவரி 29ஆம் திகதி குளியல் தொட்டியில் சார்லேட் குளித்து கொண்டிருந்தார்.

அந்த சமயத்தில் திடீரென அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.அப்போது தான் சார்லேட் கர்ப்பமாக இருந்ததை உணர்ந்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

அப்போது மிகுல் வெளியில் இருந்த சூழலில் பின்னர் வீட்டுக்கு வந்தார், தனக்கு குழந்தை விடயத்தை சார்லேட் கணவரிடம் கூற அவர் நம்பவில்லை.

அதோடு, சாலையில் கிடந்த குழந்தையை சார்லேட் தூக்கி கொண்டு வந்துவிட்டதாக கூறினார்.

இதன்பின்னர் ஒருவழியாக கணவரை சார்லேட் சமாதானப்படுத்தி குழந்தையுடன் மருத்துவமனைக்கு சென்றார்.

அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. தற்போது குழந்தையுடன் சார்லேட் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.

அவர் கூறுகையில், ஜனவரியில் என் உடல் எடை திடீரென அதிகரிக்க தொடங்கியது.

பின்னர் திடீரென ஒருநாள் குழந்தை பிறந்தது, இதை என்னால் நம்பவே முடியவில்லை, குழந்தை பிறக்கும் சில காலத்துக்கு முன்னர் தான் என் வயிறு பெரிதானது.

இது எனக்கு பிறந்த குழந்தை தான், சாலையில் இருந்து எடுத்த குழந்தை கிடையாது என என் கணவரை நம்பவைக்க மிகவும் கஷ்டப்பட்டேன்.

கர்ப்பமாக இருப்பது என தெரியாததால் மது அருந்துவது, புகைப்பிடிப்பது போன்ற விடயங்களை நான் செய்தேன்.

ஆனால் அதெல்லாம் குழந்தையை பாதிக்காமல் இருந்தது அதிசயம் தான்.

எல்லாவற்றையும் விட கர்ப்பமாக இருந்த சமயத்தில் கருத்தடை மாத்திரைகளை நான் சாப்பிட்டேன், அதே போல 9 மாதங்களுக்கு என் மாதவிடாய் சரியாகவே வந்தது.

எல்லாவற்றையும் மீறி எனக்கு குழந்தை பிறந்தது அற்புதமாகவே கருதுகிறேன், குழந்தை பிறந்த பின்னர் தொப்பிள் கொடியை நானே அறுத்தேன் என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்