பிரித்தானியாவில் 2 வயது சிறுமிக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை..கண்கலங்கும் தாய்! நெஞ்சை உருக்கிய புகைப்படம்

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவில் இரண்டு வயது சிறுமி அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதால், அவரின் வயிறு வீங்கிய நிலையில் இருக்கும் புகைப்படம் வெளியாகி பார்ப்போரை கண்கலங்க வைக்கிறது.

பிரித்தானியாவின் Blackpool பகுதியைச் சேர்ந்தவர் Shannon Latham 23 வயதான இவர் தன் மகளின் நிலை குறித்து கூறுகையில், எந்த ஒரு பெற்றோரும் தன் குழந்தைக்கு இப்படி ஒரு பிரச்சனை வரும் என்று நினைக்கமாட்டார்கள்.

கடந்த மாதம் என் மகள் Cleo Keenan(2)-வுக்கு ஏற்பட்ட வயிற்று வலி காரணமாக உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம்.

அப்போது அவளுக்கு சிடி ஸ்கேன் எடுக்க வேண்டும் என்று சொன்னார்கள். அப்போது எடுத்துப் பார்த்த போது அவளின் வயிற்றின் உள்ளே பெரிய கட்டி ஒன்று இருப்பதைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

அதன் பின் இரண்டு வாரங்கள் கழித்து நடத்தப்பட்ட சோதனையில் Cleo Keenan-க்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. அது மூன்றாம் கட்டம் எனவும், அட்ரீனல் சுரப்பி பகுதியில் இந்த நோயின் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனால் அவளின் வயிறு வீங்கிக் கொண்டு சென்றதால், பார்க்க கர்ப்பமாக இருக்கும் பெண்ணின் வயிறு போன்று இருக்கிறது.

இந்த நோயின் பாதிப்பு இருந்தாலும், சிறுமி நன்றாக இருப்பதாக பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

Cleo Keenan-வுக்கு Emelia என்ற ஐந்து வயது சகோதரியும் Ellie-Mae என்ற நான்கு வயது சகோதரியும் உள்ளனர்.

கடந்த 2-ஆம் திகதி Cleo Keenan-வுக்கான சிகிச்சை ஆரம்பிக்கப்பட்டுவிட்டதாகவும், இதனால் அவருக்கு பல சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவருடைய தாயார் கூறியுள்ளார

Cleo Keenan-ன் சிகிச்சைக்காக நிதி திரட்டப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தகக்து.மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers