இந்திய வம்சாவளி கர்ப்பிணியை கொன்றது எதற்காக? முன்னாள் கணவரின் வாக்குமூலம்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

12 வயது மகளுக்கு இஸ்லாமிய மதத்தை கட்டாயப்படுத்தி புகுத்தியது எனக்கு பிடிக்கவில்லை என லண்டனில் கர்ப்பிணி மனைவியை கொலை செய்த கணவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

இந்திய வம்சாவளி பெண்ணான தேவி என்பவர் தன்னுடைய கணவர் ராமனை (51) கடந்த 2012ம் ஆண்டு விவாகரத்து செய்தார்.

அதன்பிறகு இம்தியாஸ் முஹம்மது என்பவரை திருமணம் செய்துகொண்டு, தன்னுடைய பெயரையும் சனா முகமது என மாற்றிக்கொண்டு இஸ்லாம் மதத்திற்கு மாறினார்.

இதனால் மனஅழுத்தம் ஏற்பட்டு ஆத்திரமடைந்த ராம், கடந்த ஆண்டு நவம்பர் 12ம் திகதி காலையில், மனைவியை துப்பாக்கியால் சுட்டதாக தெரிகிறது.

இதில் உயிரிழந்த சனா வேகமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் வயிற்றிலிருந்து அவருடைய குழந்தையை உயிருடன் வெளியில் எடுத்தனர்.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட ராம், தொடர்ந்து கொலை குற்றத்தை மறுத்து வந்தார்.

இந்த நிலையில் நீதிமன்றத்தில் பேசிய ராம், ஒருமுறை பள்ளியிலிருந்து திரும்பிக்கொண்டிருக்கும் போது நான் என்னுடைய மகளை சந்தித்தேன். அவர் என்னிடம் உதவி கேட்பதை போல பேசினார்.

அவளுக்கு பிடிக்காத போதிலும் கூட இம்தியாஸ், இஸ்லாம் பிராத்தனைகளை வற்புறுத்தி கூற வைத்துள்ளார். ஹலால் உணவுகளை சாப்பிட கூறியதுடன், ஐரோப்பியர் அல்லாத ஆடைகளை உடுத்தவும் வற்புறுத்தியுள்ளார்.

ஹாலோவீன் மற்றும் கிறிஸ்மஸ் கொண்டாடுவதற்கு என் மகளுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இம்தியாஸிடம் பேச நினைத்து தான் அன்றைய தினம் அவர்களுடைய வீட்டிற்கு சென்றேன்.

ஆனால் அவர்கள் என்னை பார்த்ததும் பயத்தில் மேல் மாடிக்கு ஓடினார்கள். அவர்களை பயமுறுத்துவதற்காக மாடிப்படியில் தான் துப்பாக்கியால் சுட்டேன் என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers