லண்டனின் பழமையான தேவாலயத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்: முதல் புகைப்படம் வெளியானது

Report Print Arbin Arbin in பிரித்தானியா

லண்டனில் செயின்ட் பால் தேவாலயத்தின் உச்சியில் இருந்து தவறிவிழுந்து இறந்த இளைஞரின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

லண்டனில் பழமையான தேவாலயங்களில் ஒன்றான செயின்ட் பால் பேராலயத்தில் கடந்த மார்ச் முதல் திகதி இச்சம்பவம் நடந்துள்ளது.

அங்குள்ள புகழ்பெற்ற Whispering Gallery என்ற கலைக்கூடத்திற்கு பார்வையாளராக சென்றிருந்தார் 19 வயதேயான ஜேம்ஸ் டி சொயா ஸ்டாய்டன்.

இந்த நிலையில், குறித்த இளைஞர் அந்த கலைக்கூடம் அமைந்திருந்த உச்சியில் இருந்து தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.

இதில் பலத்த காயமடைந்த ஜேம்ஸ் ஜோர்ஜ் சம்பவயிடத்திலேயே மரணமடைந்ததாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பில் லண்டன் கொரோனெர்ஸ் நீதிமன்றத்தில் விளக்கமளிக்க வந்த ஜேம்சின் தாயார் மற்றும் உறவினர்கள்,

இச்சம்பவம் எங்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை அளித்துள்ளது. மிகவும் திறமையான, அழகான ஒரு இளைஞனை இழந்து தவிக்கிறோம் என குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த 2017 ஆம் ஆண்டு இதே கலைக்கூடத்தில் 23 வயது இளம்பெண் ஒருவர் தவறி விழுந்து மரணமடைந்தார்.

17 ஆம் நூற்றாண்டில் கட்டிமுடிக்கப்பட்ட இந்த தேவாலயமானது அங்குள்ள கலைக்கூடத்திற்காக புகழ்பெற்றதாகும்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்