பிரித்தானிய இளவரசர் ஹரியும் மேகனும் தங்கள் குழந்தையை இப்படித்தான் அழைக்கிறார்களாம்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானிய இளவசரசர் ஹரியும் அவரது காதல் மனைவி மேகனும், தங்கள் தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை அளிக்கும் மக்களுக்கு நன்றி சொல்லும் நேரத்தில் தாங்கள் தங்கள் குழந்தையை எப்படி அழைக்கின்றனர் என்பதை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

பிரித்தானிய இளவரசர் ஹரியும் அவரது காதல் மனைவி மேகனும் தங்கள் தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை அளிக்கும் மக்களுக்கு இன்ஸ்டாகிராம் வாயிலாக நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார்கள்.

அதில் அவர்கள் தங்கள் குழந்தையைக் குறிப்பிடுவதற்காக பயன்படுத்தியுள்ள வார்த்தை அவர்களது ரசிகர்களை அளவு கடந்த மகிழ்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

அப்படி அவர்கள் தங்கள் குழந்தைக்கு பயன்படுத்தியுள்ள பெயர் என்ன தெரியுமா? பிரித்தானிய இளவரசர் ஹரியும் அவரது மனைவி மேகனும் தங்கள் குழந்தையை 'Baby Sussex' என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

தங்களுக்கு பரிசுப்பொருட்களை அனுப்புவதற்கு பதிலாக, தாங்கள் சார்ந்துள்ள குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கு உதவும் தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை அளிக்குமாறு கேட்டுக் கொண்டிருந்தது ராஜ தம்பதி.

தங்கள் கோரிக்கையை ஏற்று அவ்வாறு நன்கொடை அளித்தவர்களுக்கு தங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்கள் ஹரியும் மேகனும்.

அந்த இன்ஸ்டாகிராம் பதிவில், Duke, Duchess மற்றும் Baby Sussex சார்பில் உங்களுக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அதைக் கண்ட ராஜ விசுவாசிகள் சமூக ஊடகங்களில் தங்கள் தாங்கொணா மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டுள்ளனர்.

ஒருவர், Baby Sussex என்று கூறியுள்ளது ஐஸ்கிரீமின் உச்சியில் செர்ரிப்பழம் வைத்தது போல் இருக்கிறது என்று கூறியிருந்தார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்