Brexit: மீண்டும் பிரித்தானியா நேரத்தை வீணாக்குகிறது: பிரெக்சிட் ஒருங்கிணைப்பாளர் ஆதங்கம்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரெக்சிட் நீட்டிப்பை பிரித்தானியா வீணடிப்பதாக ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் பிரெக்சிட் ஒருங்கிணைப்பாளர் ஆதங்கப்பட்டுள்ளார்.

ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் பிரெக்சிட் ஒருங்கிணைப்பாளரான Guy Verhofstadt, இன்னொருமுறை பிரித்தானியா கொடுக்கப்பட்டுள்ள நீட்டிப்பு காலத்தை வீணடிப்பதாக தெரிவித்துள்ளார்.

பிரெக்சிட்டுக்கு ஆறு மாத நீட்டிப்பு கொடுப்பதாக சம்மதம் தெரிவிக்கப்பட்ட உடனேயே, பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆளாளுக்கு விடுமுறையில் செல்லத் தொடங்கிவிட்டதையடுத்து அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், இந்த நீட்டிப்பு முடிவால், பிரித்தானியாவில் கட்சிகளிடையே பேச்சு வார்த்தை நிகழ்த்தி, ஒப்பந்தத்திற்கு வரும் நடவடிக்கையின் அவசரம் கூட காணாமல் போய்விடும் என்று தான் அஞ்சுவதாக தெரிவித்தார்.

பிரித்தானியாவின் இரு கட்சிகளும், ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும், மீண்டும் இத்தனை மாதங்களாக செய்ததையே தொடரும், அதாவது மீண்டும் காலத்தை வீணாக்கும் என்றார் Verhofstadt.

இதற்கு ஆதாரம், பிரெக்சிட் நீட்டிப்பு கொடுக்கப்பட்ட உடனேயே, பிரித்தானிய நாடாளுமன்றம் எடுத்த முதல் முடிவு, விடுமுறைக்கு செல்வதுதான் என்றார் அவர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers