வீங்கி கொண்டே சென்ற அழகிய இளம்பெண்ணின் வயிறு... சிகிச்சை செய்தபோது மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவில் கர்ப்பிணி போன்று பெரிய வயிற்றுடன் இளம் பெண் காட்சியளித்த நிலையில் அவரின் கருப்பையில் நினைத்து பார்க்க முடியாத அளவு மிக பெரிய கட்டி இருந்ததை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

லைலா கும்மின்ஸ் என்ற இளம் பெண் தனது கணவர் ஜான் எவர்டுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் லைலாவின் வயிறு சில மாதங்களாக திடீரென வீங்க தொடங்கியது. பார்ப்பதற்கு நிறைமாத கர்ப்பிணி போல அவர் காட்சியளித்தார்.

இதோடு அதிகளவில் வயிற்றில் வலி ஏற்பட்ட நிலையில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டார்.

அப்போது லைலா வயிற்றில் பெரிய கட்டி இருப்பதாகவும், கட்டியானது 20 செண்டிமீட்டர் அளவில் இருக்கும் என மருத்துவர்கள் நினைத்தனர்.

ஆனால் லைலாவுக்கு கட்டியை அகற்றும் சிகிச்சை செய்யும் போது மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

காரணம் கட்டியானது 40 செண்டி மீட்டர் அளவில் மிக பெரிதாக இருந்தது.

இதையடுத்து கட்டி வெளியில் எடுக்கப்பட்டது, அது தர்பூசணி அளவில் பெரிதாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து லைலா கூறுகையில், கட்டியை வயிற்றில் இருந்து அகற்றப்பட்ட பிறகு மிகவும் இலகுவாக உணர்கிறேன்.

முன்னர் கர்ப்பிணி போல காட்சியளித்தேன், எனக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அது புற்றுநோய் கட்டி கிடையாது என தெரியவந்தது.

தற்போது எனது உடல்நிலை தேறி வருகிறது என கூறியுள்ளார்.

தற்போது லைலா வயிற்றில் அதிகளவு தையல்கள் போடப்பட்டுள்ள நிலையில் சில வாரங்களில் அவர் முழுவதுமாக குணமடைந்து விடுவார் என தெரியவந்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers