பிரித்தானியாவில் பட்டப்பகலில் 20 வயது இளைஞரை சரமாரியாக குத்திய மர்ம நபர்! உயிருக்கு போராடும் பரிதாபம்

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, திடீரென்று ஏற்பட்ட மோதலில் 20 வயது இளைஞர் ஒருவர் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில் இருக்கும் Hyde Park-ல் 4/20 pro-cannabis என்ற நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

இதற்காக சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். அப்போது உள்ளூர் நேரப்படி மாலை 4.20 மணிக்கு நிகழ்ச்சி நன்றாக சென்று கொண்டிருந்த போது, திடீரென்று 20 வயது மதிக்கத்தக்க நபர் அடையாளம் தெரியாத நபரால் கத்தியால் குத்தப்பட்டு உயிருக்கு போராடியுள்ளார்.

இந்த தகவல் உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார் காயமடைந்த அந்த இளைஞரை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இது குறித்து பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், சரியாக உள்ளூர் நேரப்படி 4.40 மணியளவில் இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு கிடப்பதாக தகவல் கிடைத்தது. இதனால் அப்பகுதிக்கு விரைந்து வந்த நாங்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளோம்.

இந்த சம்பவம் எப்படி நடந்தது? என்ன காரணம் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். இதுவரை ஒரு நபர் கூட கைது செய்யப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும் தாக்குதலுக்குள்ளான நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வருதாகவும், ஆனால் அந்த நபரைப் பற்றி வேற எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers