இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பில் சிக்கிய பிரித்தானியர்கள் எத்தனை பேர்? அடுத்தடுத்து வெளியாகும் முக்கிய தகவல்

Report Print Santhan in பிரித்தானியா

இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 5 பிரித்தானியார்கள் பலியாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையில் அடுத்தடுத்து 8 இடங்களில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 200-க்கும் அதிகமானோர் பலியானதோடு, 300க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையையே உலுக்கியுள்ள இந்த சம்பவத்தில் இதுவரை 7 பேரை பொலிசார் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 35 பேர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் பலியாகியிருப்பதாக தகவல் வெளியான நிலையில், இதில் 5 பிரித்தானியார்கள் பலியாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில் இரண்டு பேர் பிரித்தானியா குடியுரிமை மற்றும் அமெரிக்கா குடியுரிமை பெற்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் மூன்று பேர், துருக்கியைச் சேர்ந்தவர்கள் இரண்டு பேர் எனவும், 25 பேரை இன்னும் அடையாளம் காண முடியவில்லை, வெளிநாட்டினர் 19 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து அவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், முழு விவரங்கள் கேட்ட பின்னரே அறிவிப்பு வெளியாகும் என்று அங்கிருக்கும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்